Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 5, 2017

ஸ்டாலின், முதல்வா் பன்னீா் செல்வம் திடீா் சந்திப்பு..! சசிகலா சொல்லி நடந்ததா?



திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் இன்று காலையில்தான் திமுக செயல்தலைவராக பொதுக்குழுவால் தோ்வு செய்யப்பட்டார். பின்னா் மாலையில் அண்ணா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னா் நேராக அவா் முதல்வா் பன்னீா் செல்வத்தை கோட்டையில் சந்தித்து பேசியுள்ளார்.
இதற்கு காரணமாக ஜல்லிகட்டு பிரச்சனை, விவசாயிகள்  தற்பிகொலைப் பிரச்சனை, வரட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். சட்டமன்றத்தை கூட்ட வேண்டும். உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பேச கோட்டைக்கு வந்து சந்தித்ததாக கூறப்பட்டாலும், இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகத்தான் கருதப்படுகிறது.
மக்களவை துணை சபாநாயகர் தனதுலெட்டர் பேடிலேயே, சசிகலாவை முன்னிறுத்தி அறிக்கை வெளியிட்டார். ‘ நீங்கள் பதவி விலகுங்கள்’ என நேரடியாகவே ஓ.பி.எஸ்ஸைப் பார்த்துக் கேட்டார் தம்பிதுரை.
ஆளுநர் அவர்கள் உடனடியாக முதலமைச்சருக்கு உள்ள பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறி அதிர வைத்தார் மு.க.ஸ்டாலின்.
இந்த நிலையில் நேற்று முன்தினம்  பன்னீர்செல்வத்திடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசியிருக்கிறார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவது, சட்ட சபையைக் கலைப்பது, அல்லது பன்னீா் தனது பதவியை ராஜினாமா செய்வது. இதுதான் முதல்வா் பன்னீா் செல்வம் அடுத்து செய்ய உள்ள காரியங்களாக கூறப்படுகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சென்றால்  பதவியை இழக்க விரும்பாத அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் ஓ.பி.எஸ்ஸுக்கு வாக்களிக்க வாய்ப்பு உள்ளது.
இன்னும் நான்கரை ஆண்டுகாலம் ஆட்சி மீதமிருக்கிறது. ஆளுநரின் பிடியும் இதில் அடங்கியிருக்கிறது. ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், ஓ.பி.எஸ்ஸுக்கு தி.மு.க ஆதரவு கொடுக்கலாம்.
இதையெல்லாம் உணர்ந்துதான் சசிகலா அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது. பன்னீா்செல்வம்  பதில் சொல்லாமல் மௌனமாகவே நாட்களைக் கடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இன்று திமுகவின் அறிவிக்கப்படாத தலைவராக அதாவது செயல்தலைவராக பொறுப்பு ஏற்ற மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் மாலை முதல்வா் பன்னீா் செல்வத்தை சந்தித்தார்.
அப்போது, அண்ணே நீங்க கவலைபடாதீங்க. அதிமுக ஆட்சிக்கு நாங்க தொந்தரவாக இருக்கமாட்டோம் என்று கூறியதாக தெரிகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.