Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 1, 2016

புதிய 500 ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு... பிரிண்டிங் செய்யும் பணி நிறுத்தம்?


புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில் நாடு முழுவதும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

ரூபாய் மதிப்பிழப்பு விவகாரத்தைத் தொடர்ந்து மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் நாடு முழுவதும் பரவலாகக் கிடைக்கத் தொடங்கியுள்ளன. ஆனால் புதிய 500 ரூபாய் நோட்டுகள் நாட்டின் பல பகுதிகளில் தட்டுப்பாடு நிலவுகிறது. புதிய 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தியதாலேயே நாட்டின் பல பகுதிகளில் தட்டுப்பாடு நிலவுவதாக ஒரு வதந்தி பரவியது. மேலும், அச்சுப்பிழைகள் மற்றும் இருவேறு விதமான புதிய 500 ரூபாய் நோட்டுகள் கடந்த வாரத்தில் புழக்கத்தில் வந்ததால் குழப்பம் நிலவியது.




இந்நிலையில், புதிய 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி இரு மடங்காக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்ட்ராவில் உள்ள நாசிக் மற்றும் மத்தியப்பிரதேசத்திலுள்ள டேவாஸ் ஆகிய இடங்களில் உள்ள ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான அச்சகங்களில் புதிய 500 நோட்டுகள் அச்சடிக்கும் பணி நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மேற்குவங்க மாநிலம் சல்பானி மற்றும் கர்நாடக மாநிலம் மைசூரு ஆகிய இடங்களில் உள்ள அச்சகங்களில் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



அதிலும் குறிப்பாக நாசிக்கில் தினசரி 80 லட்சம் (ரூ.400 கோடி) புதிய 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.