ரஷ்ய நாட்டை சேர்ந்த தூதரக அதிகாரிகள் 35 பேரை நீக்கம் செய்ததோடு, அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு அதிபர் பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டு அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் இமெயில்களை ஹேக் செய்தது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை ரஷ்ய அதிபர் புதின் சம்மதத்துடன்தான் அந்நாட்டு உளவுத்துறை மேற்கொண்டுள்ளது என்று அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அதிபர் தேர்தலில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இருந்து அந்நாட்டு அதிகாரிகள் 35 பேரை அமெரிக்கா அதிரடியாக நீக்கம் செய்துள்ளது. மேலும் தூதரக அதிகாரிகள் 35 பேரை அவர்களது குடும்பத்துடன் அமெரிக்காவை விட்டு வெளியேற 72 மணி நேரம் அவகாசம் வழங்கியுள்ளது. இது போன்று ரஷ்யா மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ள அதிபர் ஒபாமா திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.