அது கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழி. அங்கே இருக்கும் குருடம்பாளையம் கிராமத்துக்குள் நுழைந்தாலே நீங்கள் ஒரு புது பரவசத்தை உணரலாம். எல்லா கிராமங்களிலும் இருக்கும் அதே இயற்கை சூழல் இங்கேயும் நிச்சயம். அத்துடன் நவீன வசதிகளுடன் ஒரு ஸ்மார்ட் கிராமம் என மெச்சும் வகையில், மற்ற ஊர்களிடம் இருந்து தனித்து தெரிகிறது இந்த குருடம்பாளையம். அங்கே என்ன சிறப்பு? வாங்க தெரிந்துகொள்ளலாம்.
முதன்முதலில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்த இலவச இணையம், காபி ஷாப், சோலார் மின்சாரம், திடக்கழிவு மேலாண்மை என்று பல விதங்களில் கலக்கிக்கொண்டிருக்கும் கிராமம் தான் இந்த குருடம்பாளையம். இவை அனைத்தையும் முன்னெடுத்து செல்பவர் இந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் ரவி.
இலவச வைஃபை! இலவச சேவை எண்!

கிராமத்துக்குள்ளே சென்றதும் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் எங்களை இலவச வைஃபை மையத்துக்கு வழி நடத்தினார். இந்த இலவச வைஃபையை அந்த ஊரைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் அதிக பட்சம் 2 மணி நேரம் வரை உபயோகிக்கலாம். 50மீ சுற்றளவிற்கு எங்கு வேண்டுமானலும் அமர்ந்து உபயோகிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இந்த வைஃபை. இந்த வசதியை பயன்படுத்த விரும்புவோர், தங்களுடைய அடையாள அட்டையை காண்பித்து அங்கே பதிவு செய்துகொண்டு கடவுச்சொல்லை பெற்று இனைய சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். அந்த மையத்துக்கு அருகிலேயே ஒரு காபி ஷாப் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே வை-ஃபை சேவையை பயன்படுத்த வருபவர்கள் அந்த காபி ஷாப்பில் அமர்ந்து இணைய சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
“இந்த திட்டத்தை நாங்கள் துவங்கி 2 மாதங்கள் ஆகிறது. தற்போது இது 50மீ சுற்று வட்டாரத்தில் மற்றும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஆரம்பித்த நாளில் இருந்து இன்றுவரை நாளுக்கு நாள் மாணவர்களின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தற்போதைக்கு ஒரே நேரத்தில் 50 பேர் வரை இந்த வை-ஃபையை பயன்படுத்தலாம். இதன் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் இதனை இந்த ஊர் முழுவது பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்படும். மேலும் இந்த இணைய சேவையை தவறான எந்த விஷயத்திற்கும் பயன்படுத்த முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.” என்கிறார் இந்த இடத்தின் மேற்பார்வையாளராக இருக்கும் பொறியியல் பட்டதாரி சூர்யா.

“நான் இரண்டாம் ஆண்டு இளங்கலை படிப்பு படிக்கிறேன். இந்த இணைய சேவை எங்களுக்கு மிகவும் பயனளிக்கிறது. நான் எனக்கு தேவையான அனைத்து தகவல்களையும் இங்கு அமர்ந்தபடியே பெற்றுக்கொள்கிறேன். மேலும் பல உபயோகமான மென்பொருள் போன்றவையும் இந்த இணையம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்கிறேன். எங்களுக்கு எதாவது சந்தேகங்கள் இருந்தால் இந்த இடத்தின் மேற்பார்வையாளர் சூர்யாவிடம் கேட்டு தெரிந்துகொள்கிறேன். அவரும் உதவி செய்கிறார்.” என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் இணைய வசதியைப் பயன்படுத்தும் இளைஞர் ஒருவர்.
இந்த இணைய வசதி, பொழுதுபோக்கு முதல் படிப்பு வரை அனைத்தையும் எளிதில் பெற அந்த ஊர் மாணவர்களுக்கு உதவுகிறது. இணையம் மட்டுமல்ல..இன்னும் நிறைய வசதிகளை கொண்டுள்ளது குருடம்பாளையம். இது மட்டுமின்றி இந்த கிராமத்திற்கென தனி சேவை எண் கூட வைத்திருக்கிறார்கள். 8489697979 என்பதுதான் அந்த சேவை எண். "இந்த ஊரில் யார் எப்போது அழைத்தாலும் அவர்களுக்கு பதில் அளித்து அவர்களின் சந்தேகங்களை தீர்த்துவைக்கிறோம்" என்கிறார் இந்த சேவையின் மேற்பார்வையாளர் நவீன்.
மின்சாரத்துக்கு சோலார்! குப்பையில் இருந்து பயோகாஸ்!
பின் நாங்கள் திடக்கழிவு மேலாண்மை மையத்துக்குச் சென்றோம். செல்லும் வழியில் சாலை ஓரங்களை சோலார் மின்விளக்குகள் அலங்கரித்தன. நாங்கள் அந்த மையத்தை அடைந்தோம். அந்த மையத்தில் ஊரில் உள்ள அனைத்து குப்பைகளும் மின்சாரத்தால் இயங்கும் வண்டிகள் வாயிலாக சேகரிக்கப்படுகிறது. அப்படி சேகரிக்கப்பட்ட குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்தெடுக்கப்படுகிறது. பிரித்தெடுத்த பின் மக்கும் குப்பையை அங்கேயே மறுசுழற்சி செய்து பயோகாஸ் மற்றும் இயற்கை உரமாக மாற்றுகிறார்கள். மக்காத குப்பையை அதன் வகை வாரியாகப் பிரித்து அதனை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். ஒரு துளி குப்பை கூட இங்கிருந்து குப்பையாக வெளியே போவதில்லை. இந்த பணிகள் அனைத்தையும் வானவில் மகளிர் குழு என்ற அமைப்பை சேர்ந்த பெண்களே கவனித்துக் கொள்கிறார்கள்.

"குப்பை குப்பையாகமல் பார்த்துகொள்வதே எங்களின் வேலை" என்ற வார்த்தைகளுடன் தன் பேச்சை துவங்குகிறார் இந்த இடத்தின் மேற்பார்வையாளர் கோபி. "எங்கெல்லாம் குப்பை உருவாகிறதோ அங்கெல்லாம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று வகை பிரித்து அதை இந்த மையத்துக்கு கொண்டு வருகிறோம். இங்கு கொண்டு வரும் குப்பையை எவ்வாறெல்லாம் பயன்படுத்த முடிகிறதோ அவ்வாறெல்லாம் பயன்படுத்துகிறோம். இந்த மையத்தைவிட்டு குப்பை வெளியே செல்லும்போது குப்பையாக செல்வதில்லை. இங்கு வரும் குப்பையை உபயோகமிக்க பொருட்களாக மாற்றி அதில் வரும் லாபத்தை இங்கு வேலை செய்பவர்களே பங்கிட்டுக்கொள்கிறோம்." என்கிறார் கோபி.

இங்கு என்ன வித்தியாசம் என்றால், இங்கு கொண்டுவரப்படும் மட்கும் குப்பைகளில் ஆடு மாடு சாப்பிடக்கூடிய இலைகள், காய்கறிகள் போன்றவை அங்கு அவர்களால் வளர்க்கப்படும் மாடுகளுக்கு உணவாக அளிக்கப்படுகிறது. பின் அந்த மாடுகளின் சாணத்திலிருந்து பயோகாஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன் பின் மீதமுள்ள கழிவுகளை மண்புழுக்களுக்கு உணவாக அளிக்கப்பட்டு இயற்கை உரமாக மற்றப்படுகிறது. இது குறித்து இந்த மையத்தின் மூத்த மேற்பார்வையாளர் வடுகநாதனிடம் கேட்டபோது,"நாங்கள் எங்களிடம் வரும் பழங்கள் மற்றும் காய்கறிகளை நேரடியாக மட்க வைத்துவிடலாம். ஆனால் நாங்கள் அவ்வாறு செய்வதில்லை. அவை எங்களிடம் வளர்ந்துவரும் மாடுகளுக்கு உணவாக அளிக்கப்படுகிறது. பின் மாடுகளின் சாணத்திலிருந்து பயோகாஸ் தயரிக்கப்படுகிறது. பின் இதன் கழிவுகளை மண்புழுக்களுக்கு உணவாக்கி இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் மாடுகளுக்கு உணவாவது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த மாடுகள் எங்களிடம் மூன்று வருட காலமாக வளர்ந்து வருகிறது. இந்த மூன்று வருட காலத்தில் இந்த மாடுகள் ஆறு கன்றுகளை ஈன்றிருக்கும்" என்று கன்றுக்குட்டிகளை தடவிக்கொடுத்தபடியே மகிழ்ச்சியாக கூறுகிறார் வடுகநாதன். மேலும் இந்த மாடுகளின் வாயிலாக பஞ்சகவ்யா, பூச்சிவிரட்டி போன்றவையும் தயாரிக்கப்படுகிறது.

இலவச வைஃபை, மக்களுக்கு சேவை எண், குப்பைகளில் இருந்து பயோகாஸ், சோலார் மின்விளக்கு போன்ற பல செயல்களில் கலக்கி வருக்கிறது இந்த ஸ்மார்ட் கிராமம். தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் முன்மாதிரியாக அமைகி்றது இந்த கிளீன் அண்ட் கிரீன்" குருடம்பாளையம். நமது நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் கிராமங்களில் இது போன்ற புதுமையான மாற்றங்கள் நிகழ வேண்டியது காலத்தின் கட்டாயம் எனலாம். ஒரு ஊராட்சியாக இருந்து கொண்டே கூட இவ்வளவு மாற்றங்களை சாத்தியப்படுத்தி இருக்கிறது குருடம்பாளையம். நமது கிராமங்களில் இருக்கும் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பும் தனது அதிகாரங்களை இதுபோல திறமையாக பயன்படுத்தினால், நிச்சயம் கிராமங்களில் இருந்து ஒரு புதுவசந்தம் வரலாம்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.