Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 9, 2016

சசிகலா கோஷ்டி கை ஓங்கினால் அதிமுக உடைவது உறுதி: மத்திய உளவுத்துறை கருத்து



அதிமுகவின் தற்போதைய நிலை அக்கட்சி தொண்டர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அதிமுகவில் நடக்கும் ஒவ்வொரு அசைவையும் மத்திய உளவுத்துறை மிக மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது.



அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது அதிமுக மூத்த தலைவர்கள் ஒருவரைக் கூட ஜெயலலிதாவை சந்திக்கவிடாமல் சசிகலா தடுத்ததை அதிமுகவினரால் இன்னமும் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு ஆட்சியையும் கட்சியையும் ஒட்டுமொத்தமாக தமது கட்டுப்பாட்டில் சசிகலா வைத்திருந்ததையும் அதிமுக தொண்டர்களால் ஏற்க முடியவில்லை என்கிறது மத்திய உளவுத்துறை வட்டாரங்கள்.



ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்ததால் அதிமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் இதுபற்றி எதுவுமே பேசாமல் அமைதிகாத்திருந்தனர். அப்படி சசிகலா கோஷ்டிக்கு எதிராக ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே கலகக் குரல் எழுப்பினால் கட்சிக்கு கெட்ட பெயர் என பலரும் அமைதி காத்தனர் என்கிறது மத்திய உளவுத்துறை.



தற்போதைய நிலையில் அடுத்த சில மாதங்கள் அதிமுகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும்... குறிப்பாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் நடவடிக்கைகள், கட்சி மற்றும் ஆட்சியில் தலையீடுகள் அதிகரிக்குமேயானால் நிச்சயமாக அதிமுகவில் இதற்கு கடும் எதிர்ப்பு எழும்; இதனால் அதிமுக உடைவது உறுதி என்றுதான் மத்திய உளவுத்துறை கருதுகிறது.



ஆகையால் அதிமுக ஒன்றாக இருப்பதும் உடைவதும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் கைகளில்தான் உள்ளது. அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என விரும்பினால் அக்கட்சியின் கட்டமைப்பை சீர்குலைக்காத வகையில் தங்களது நடவடிக்கைகளை சசிகலா கோஷ்டி பார்த்துக் கொண்டால் சரி எனவும் கருதுகிறது உளவுத்துறை.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.