December 21, 2016
குடிபோதையில் நண்பனை கத்தியால் குத்திக் கொன்ற நண்பன்!
சென்னை ஏழு கிணறு பகுதியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞரை அவரது நண்பரே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஏழு கிணறு பகுதியில் உள்ள மலையப்பன் தெருவில் உசேன் மற்றும் கணேசன் ஆகிய இருவரும் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவரும் மது அருந்தும் பொழுது உசேன், காணாமல் போன தனது செல்போனை கணேஷன் தான் எடுத்துள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரம் அடைந்த உசேன் கணேஷன் கழுத்தில், கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
ரத்தவெள்ளத்தில் சாய்ந்த கணேசன் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கணேசனின் உடலை, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து கொலையாளி உசேனை போலீசார் தேடி வருகின்றனர்
குடிபோதையில் நண்பனை கத்தியால் குத்திக் கொன்ற நண்பன்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 21, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 21, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.