Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 14, 2016

அக்கா மரணத்தை கொச்சை படுத்தக் கூடாது..! தளபதியின் ஒற்றை மந்திரச்சொல்..! அடங்கிய தொண்டர் படை..!



மறைந்த முன்னாள் முதல்வர் மரணம் இந்த நாட்டிற்கு இரண்டு அசத்தல் விஷயத்தை பாடமாகச் சொல்லிவிட்டுச்  சென்றுள்ளது…!
ஒரு தலைமை நினைத்தால் தொண்டர்களை அமைதிப்படுத்தி சட்டம் ஒழுங்கை காப்பாற்றி விட முடியும். வன்முறைகளைத் தடுத்து விட முடியும்.!
அதற்கு உதாரணம் தான் ஜெ. மரணம்…! கடந்த 4,5  தேதிகளில் அதிமுக தொண்டர்கள் காட்டிய அபார அமைதி, கண்ணீரோடு காட்டிய நிசப்தம்..! ஒரு சிறு கல்வீச்சு கூட நிகழவில்லை…!
அந்த அளவுக்கு பொறுமை காத்தார்கள். துணை ராணுவம் வந்தது. அவர்களுக்கு வேலையே இல்லாமல் செய்து விட்டார்கள் ஜெ. பக்தர்கள்.
தங்கள் கோபத்தை, வருத்தத்தை கண்ணீரோடு முடித்துக் கொண்டார்கள். காவல் துறை காட்டிய பொறுப்பும் அசாத்தியமானது..!
ஆனால், கேலியும், கிண்டலும் நக்கலுக்கும் பெயர் போன கட்சி திமுக.சிறு விஷயம் கிடைத்தால் கூட அதை பெரிய அளவில் கேலி செய்து கொண்டாடித் தீர்த்து விடுவார்கள்.
1985 காலகட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர், மக்கள்திலகம் எம்ஜிஆர் தொண்டர்களை  கத்தி வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்ன போது அதை பெரிய விஷயமாக கழுவிக்கழுவி ஊற்றினார்கள்.
போர்பஸ் பீரங்கி ஊழலை, 1989 தேர்தலில் வீதிக்கு வீதி தட்டிப் போர்டுகள் வைத்து கொண்டாடினார்கள். பீரங்கி செய்தும் வீதிக்கு வீதி வைத்தார்கள்.
ஆனால், ஜெ. மறைந்த போது, கேலிப் பொருளாக பல விஷயங்கள் இருந்தது. ஆனால், தளபதியின் அந்த ஒற்றை வார்த்தை…ஒரே ஒரு கட்டளைக்கு அடி பணிந்தார்கள் திமுகவின் கோடான கோடி தொண்டர்கள்.
முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் கூட சிறிய அளவில் கேலிகள் தெரிந்தது. ஆனால் அதையும் தளபதி தடுத்து நிறுத்தினார்.
அக்கா மரணத்தை யாரும் கொச்சைப் படுத்தக் கூடாது என்று கூறிய அந்த ஒற்றைச்சொல் மந்திரத்திற்கு …அடங்கிப் போனார்கள் தொண்டர்கள்…!
கூடவே,தி.மு.க பொதுக்குழுவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரவும் ஸ்டாலின் கூறியதாக தொண்டர்கள் பெருமையுடன் கூறிக்கொள்கிறார்கள்.
ஒரு தலைவனுக்கு வேண்டிய அத்தனை பக்குவமும் தளபதிக்கு வந்து விட்டது..! இன்னும் என்ன யோசனை..!
தலைவராக அறிவிக்க இன்னும் ஏன் தாமதம் என்கிறார்கள் திமுக தொண்டர்கள்..!?
நியாயமான கோரிக்கை..!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.