Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 17, 2016

கால்பந்தாட்ட வீரர் பீலேவை பற்றி எத்தனை பேருக்கு தெரியும்


1958 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டி பிரேசில் மற்றும் பிரான்ஸ் இடையே நடைபெற்றது.. ஐரோப்பியாவில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் பிரேசில் அணியில் ஆட்சரியத்தக்க வகையில் 17 வயது  சிறுவனான நசிமண்டோவும் அணியில் இடம் பெற்றார் .. கறுப்பர் இனத்தை சேர்ந்த சிறுவனான  நசிமண்டோ மைதானத்தில் இருந்த வெள்ளை இன ரசிகர்களால் ஏளனமாக பார்க்கப்பட்டார்.. எப்படியும் பிரான்ஸ் தான் வெல்லும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று..

எதிர்பார்க்கப்பட்டததை போலவே முதற்பகுதியில் பிரான்ஸ் கோல்கணக்கை துவங்க பிரேசில் பூஜ்யம் என பின்தங்கியது.. இரண்டாம் பகுதியின் கடைசி 20 நிமிடங்களில் மைதானத்தில் ஏளனமாக பார்க்கப்பட்ட நசிமண்டோ தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் மைதானத்தின் அனைவரையும் தன்னை திரும்பி பார்க்க வைத்தார்.. தொடர்சியாக மூன்று கோள்களை அடித்த நசிமண்டோ பிரேசிலை இறுதியப்போட்டிக்கு முன்னேற்றினார்..

இறுதிப்போட்டியில் நிட்சயம் வெல்லும் என்று கணிக்கப்பட்ட சுவீடனை தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் தண்ணி காட்டி பிரேசில் நாட்டுக்கு முதல் உலகக்கோப்பையை வென்று கொடுத்தார் .. அந்த போட்டியில் தான் நசிமண்டோ என்று அழைக்கப்பட்ட வீர்ர் தனது பெயரை பீலே என்று மாற்றினார்..

ஒடுக்கப்பட்ட  சமூகத்தை சேர்ந்த பீலே , சிறுவனாக இருக்கும் போது சூ கூட வாங்க வசதியில்லாமல் வெறும் காலில் விளையாடியவர் .தனது தந்தையுடன் மனித கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் சேர்ந்து அங்கேயே தனது தந்தையின் பயிற்சியின் மூலம் உலகை திரும்பி பார்க்க வைத்த ஜாம்பவானாக மாறினார்..  பீலே சிறுவனாக இருந்த போது முந்தய உலகக்கோப்பை போட்டியில் மனம் உடைந்து அலுத்து கொண்டிருந்த தனது தந்தைக்கு நான் பிரேசில் அணிக்காக விளையாடி நிட்சயம் உலகக்கோப்பையை வென்று கொடுப்பேன் என்று 8 ஆண்டுகளுக்கு முன்னர் கொடுத்த வாக்கை தனது 17 ஆம் வயதில் நிறைவேற்றி உலகை திரும்பி பார்க்க வைத்தார்..

 அத்தோடு மூன்று முறை உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்ற ஒரே வீரர் என்ற பெருமையையும் பீலே பெற்றார் .. அதோடு மட்டுமில்லாமல் ஜிங்கா என்ற அதிரடியான ஆட்டத்தை உலகிற்கு அறிமுகம் செய்த வீரரும் பீலே தான்.. இந்த ஆட்டம் உலகில் அதிகமான ராசிகர்களால் விரும்பப்படும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது..

மேலும் ஒலிம்பிக் கமிட்டியால் கடந்த நூற்றாண்டின் ஒப்பற்ற வீரர் என்றும் புகழப்பட்டார்.. மேலும் பிரேசில் நாட்டு அதிபரால் பீலே தேசத்தின் புதையல் என்று புகழப்பட்டார்..

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.