போலீஸிடம் சிக்கிய மதன், பணம் தொடர்பாக எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத்தை குறித்து திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வேந்தர் மூவிஸ் மதன் மாயமான 6 மாதங்களுக்குப் பிறகு திருப்பூரில் கைது செய்யப்பட்டார். மதனின் மனைவி வழி உறவினரான வர்ஷா வீட்டில் ரகசிய அறையில் பதுங்கி இருந்த மதனை போலீஸார் பிடித்த சம்பவமே சினிமாவை மிஞ்சும் வகையில் நிகழ்ந்துள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு பணம் வாங்கி ஏமாற்றியதாக மதன் மற்றும் எஸ்.ஆர்.எம் கல்வி குழுமம் மீதும் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். 123 பேர் கொடுத்த புகாரில் 84 கோடி ரூபாய் வரை ஏமாற்றியதாக கூறப்பட்டுள்ளது.
பணம் எங்கே
தற்போது, பணம் எங்கு, யாரிடம் இருக்கிறது என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இந்த வழக்கில் ஏற்கெனவே கைதான எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத்தின் தலைவர் பச்சமுத்துவிடமும் பணம் தொடர்பான கேள்விகளை கேட்டனர். அதற்கு பச்சமுத்து, மதனுக்கும், எஸ்,ஆர்.எம் கல்வி குழுமத்துக்கும், இந்திய ஜனநாயக கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத்தின் பெயரை மதன், தவறுதலாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்தார்,
இதையடுத்து, பச்சமுத்து, ஜாமீனில் வெளியில் இருக்கிறார். மதனிடம் விசாரித்தால்தான் பணமோசடி குறித்த தகவல் வெளியாகும் என்று போலீஸார் எதிர்பார்த்திருந்தனர். தற்போது மதனும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விட்டார். இதனால் இந்த வழக்கு அடுத்த நகர்வை எட்டி இருக்கிறது.
6 மாத வாழ்க்கைத் திட்டம்
மதன், தரப்பில், மாணவர் சேர்க்கைக்காக பெறப்பட்ட பணம் எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத்திடம் கொடுத்து விட்டதாக சொல்கிறார்கள். ஆனால் அதை எஸ்.ஆர்.எம் கல்வி குழுமம் மறுக்கிறது. இதனால் பணத்தை கொடுத்தவர்கள் மருத்துவ சீட் கிடைக்காமலும், வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தியபடி வருத்தத்தில் இருக்கின்றனர்.
இந்நிலையில் பணம் குறித்து மதனிடம் விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதற்காக மதனை போலீஸ் காவலில் எடுக்க உள்ளனர், அப்போது மதனின் இன்னொரு முகம் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 6 மாதங்களாக மதன், தலைமறைவாக இருந்தபோது அவர் வாழ்ந்த வாழ்க்கை குறித்த தகவல்களை போலீஸார் சேகரித்துள்ளனர். அப்போது மதனுக்கு அடைக்கலம் கொடுத்த பெண்கள், நண்பர்கள், கூட்டாளிகள், தெரிந்தவர்களின் பட்டியல் போலீஸாரின் கையில் உள்ளது. அவர்கள் மீதும் போலீஸார் விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளனர். தலைமறைவு வாழ்க்கைக்கு மதன், முன்கூட்டியே திட்டமிட்டுள்ள தகவலும் போலீஸிக்கு தெரியவந்துள்ளது.
எஸ்.ஆர்.எம் கல்வி குழுமம்
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், மதனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறோம். மதனைக் கைது செய்து திருப்பூரிலிருந்து சென்னைக்கு அழைத்து வரும்போது சில கேள்விகளை அவரிடம் கேட்டோம். அதில் எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத்திடம் பணம் கொடுத்ததாக தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டு இருந்ததை கேட்டனர். அதற்கு மதன், பணம் கொடுத்தற்கான ஆதாரம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தலைமறைவாக இருந்தபோது வடமாநிலங்களில் வாங்கிய வீடு, இடம், கார். திருப்பூர், கேரளாவில் வாங்கிய சொத்துக்கள் விவரங்களை சேகரித்துள்ளோம். மேலும் மதனின் பணம், யாரிடம் இருக்கிறது என்றும் விசாரித்து வருகிறோம். அதில் எங்களுக்கு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. அவரது சொத்துக்கள் பினாமி பெயரிலும் வாங்கப்பட்டுள்ளது. அந்த பினாமி குறித்த விவரங்களையும் சேகரித்துள்ளோம். அவர்களில் முக்கிய வி.ஐ.பிக்கள் இருக்கின்றனர். அவர்களிடம் விசாரணை நடத்த உள்ளோம். தலைமறைவாக இருந்த காலக்கட்டத்தில் மதன் வாங்கிய சொத்துக்களை முடக்கவும், அவர் பதுக்கி வைத்திருக்கும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மதனின் கணக்கு விவரங்களும் ஆராயப்பட்டு வருகிறது என்றார்.
மதன் மீது எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகளால் அவருக்கு நெருக்கமானவர்கள் கலக்கத்தில் உள்ளனர்,

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.