Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 23, 2016

பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர்களை அவமதித்த வங்கி அதிகாரி



வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் வங்கியில் பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர்களை வங்கி அதிகாரி ஒருவர் அவமரியாதையாகத் திட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் நாடு முழுவதும் வங்கிகளில் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர். ஆனால் போதிய பணம் இல்லாததால் வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே மோதல்கள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பணம் எடுக்க சென்ற வாடிக்கையாளர்களை அங்குள்ள வங்கி அதிகாரிகள் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளில் திட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இது பொதுமக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.