November 28, 2016
ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு: எதிர்கட்சிகள் இன்று போராட்டம்
பழைய 500 , ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
பொதுமக்கள் கொந்தளிப்பு :
500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதையடுத்து நாடு முழுவதும் பெருமளவு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், ஏ.டி.எம்களில் தேவையான அளவு பணம் எடுக்க முடியாததால் பொதுமக்கள் கொந்தளிப்பான மனநிலையில் உள்ளனர்.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் எதிர்கட்சிகளும் கடுமையான அணுகுமுறையை கடைபிடித்து வருகின்றன. இப்பிரச்சனையை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எழுப்பி இரு அவைகளையும் முடக்கி வருகின்றன. இந்நிலையில் பழைய 500 , ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இப்போராட்டத்தில் பல்வேறு கட்சிகளும் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வங்கிகளூக்கு நேற்றுமுன்தினமும், நேற்றும் விடுமுறை விடப்பட்டதால், பணம் எடுக்க ஏடிஎம் மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் ஏடிஎம்.,கள் முடங்கும் சூழல் ஏற்பட்டது. பல ஏ.டி.எம் கள் திறக்கப்படவே இல்லை. வங்கிகளும் ஏடிஎம் களும் மூடப்பட்டு கிடந்ததால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளானார்கள் . தங்களுக்கு ஏற்கனவே கிடைத்த ரூ.2000 நோட்டையும் மாற்ற முடியாமல் மக்கள் தவித்தனர். திருமண வீட்டார் மத்திய அரசின் அறிவிப்பால் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். அதேபோல் ஆட்டோ ஓட்டுனர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை அனைவருமே சில்லறை தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகிறார்கள் அதனால் தான் இந்த போராட்டத்திற்கு அழைப்பு என்று எதிர்கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர். மக்கள் படும் துயரங்களை ஜனாதிபதியை சந்தித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் முறையிட்டுள்ளார். இது தொடர்பாக 200 எம்பிக்கள் தர்ணா போராட்டம் நடத்தியது நினைவிருக்கலாம்.
இதனிடையே தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் போலி 2 ஆயிரம் ரூபாய் , 100 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து வந்த 6 பேர் கொன்ட கும்பலை கைது செய்த போலீசார் ,அவர்களிடமிருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் மாநகரின் மையப்பகுதியில் ஓடும் திருமனிமுத்தாற்றில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அடங்கிய மூட்டைகள் கொட்டப்பட்டதாக பரவிய வதந்தியால் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரன்டனர். முடிவில் அது வெறும் புரளி என தெரியவந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு: எதிர்கட்சிகள் இன்று போராட்டம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 28, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 28, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.