Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 13, 2016

56 மணிநேரதிற்கு பிறகு முடிவுக்கு வந்தது பாம்பூர் என்கவுன்டர்


ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில்  சில நாட்கள் முன்பு  மாநில அரசுக்கு சொந்தமான தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிலகத்தின் தலைமை அலுவலகத்தின் உள்ளே பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த 56 மணி நேர துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்துள்ளது.

கட்டிடத்தில் பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டுவிட்டனர், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுவிட்டன என ராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள மேஜர் ஜெனரல் அசோக் நரூளா, ‘ பாம்பூர் என்கவுன்டர் முடிவுக்கு வந்துவிட்டது. பதுங்கியிருந்த இருவர் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளனர். இரண்டு ஆயுதங்களை கைப்பற்றியுள்ளோம், அவர்கள் பதுங்கியிருந்த கட்டிடம் 50 அறைகளை கொண்ட மிகப் பெரிய கட்டிடம், எனவே மிக தந்திரமாக தாக்குதல் நடத்த வேண்டியிருந்தது. அதனால் தான் கட்டிடத்தை கைப்பற்ற 56 மணி நேரங்கள் ஆனது. கொல்லப்பட்ட தீவிரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதில் சந்தேகம் வலுத்துள்ளது’, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.