ஒவ்வொரு குடும்பத்தில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளுக்கும் பத்திரிகை அடித்து முறைப்படி வரவேற்பது நம் மரபு. அதுபோல் கோயில் மற்றும் இதர விழாக்களுக்கும் பத்திரிகை அடிக்கப்படுவது உண்டு. ஆதிகாலம் முதல் தற்போதுள்ள நவீன காலம் வரை அவர்களின் வசதிக்கு ஏற்றவாறு பத்திரிகைகள் பலவகைகளில் அச்சடிக்கப்படுகின்றன. அந்தவகையில் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி அனைவரையும் கவரும் வகையில் எல்.சி.டி திரையில் வரவேற்கும்படியான திருமணப் பத்திரிகைகளை வடிவமைத்திருக்கிறார். அது, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பி.ஜே.பி ஆட்சியில் அமைச்சராக இருந்த கலி ஜனார்த்தன் ரெட்டி, தனது மகளின் திருமணத்துக்காகத் தயாரித்துள்ள பத்திரிகையைப் பார்த்தால் வாயடைத்துப் போவீர்கள்.
சுரங்கத் தொழிலில் பல கோடி லாபம் கொழித்த ஜனார்த்தன் ரெட்டி, தனது மகள் ப்ராமினி திருமணத்துக்காக ஒரு ஸ்பெஷல் கல்யாணப் பத்திரிகையைத் தயாரித்துள்ளார். வழக்கமான வார்த்தைகள் அச்சடிக்கப்பட்ட பத்திரிகையாக இல்லாமல், இது பெரிய பாக்ஸ் போன்று உள்ளது. திருமண பத்திரிகையைத் (பெட்டி) திறந்து பார்த்தால், ஜனார்த்தன் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர், திருமணத்துக்கு அழைக்கும் ஒரு வீடியோ எல்.சி.டி திரையில் ஓடுகிறது.
திருமணத்துக்காக ஒரு நிமிட ஸ்பெஷல் வீடியோவை உருவாக்கியுள்ளனர். அதில் ரெட்டி, அவரது மனைவியுடன் பாட்டு பாடிக்கொண்டு தனது மகளை அறிமுகப்படுத்துகிறார். அதன்பிறகு, மணமகள் ப்ராமினியும், மணமகன் ராஜுவ் ரெட்டியும் டூயட் பாடுகிறார்கள். கடைசியாக, திருமண தேதி மற்றும் இடத்தை, ரெட்டி குடும்பத்தினர் கூறுவதுடன் பாடல் முடிவடைகிறது. பத்திரிகையைத் திறந்த உடன் உள்ளே இருக்கும் எல்.சி.டி திரையில் பாடல் ஆட்டோ ப்ளேவாக ஓடுவதுபோல வைத்துள்ளனர். இந்த பாடல் ஷூட்டிங்குக்காகத் தனியாக செட் போட்டு தயாரித்துள்ளனர்.
நவம்பர் 16-ம் தேதி நடக்கவுள்ள இந்தத் திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், பிரபுதேவா, தமன்னா, கத்ரீனா கைப் ஆகியோர் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள முக்கியமான சக்திவாய்ந்த மனிதர்களுள் ஒருவரான கலி ஜனார்த்தன் ரெட்டி, ஒருமுறை சட்டவிரோதச் சுரங்க வழக்கில் கைதாகி மூன்று ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். கடந்த ஆண்டு ஜாமீனில் வெளிவந்து, தற்போது மகளின் திருமணத்தை மிகப் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டு உள்ளார்.
திருமணப் பத்திரிகையே இப்படியா...? என்று தீரும் ஆடம்பர திருமண மோகம்?

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.