Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 31, 2016

ஜெ. பெருவிரல் ரேகை... அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு செல்லாது ஏன்? மூத்த வக்கீல் துரைசாமி விளக்கம்


முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவில் பெருவிரல் ரேகை வைத்ததால் அந்த வேட்புமனுக்கள் செல்லாது என மூத்த வழக்கறிஞர் துரைசாமி விளக்கம் அளித்துள்ளார்.

 அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமையன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர். அதில் வேட்பாளர்களை அங்கீகரிக்கும் வகையில் அதிமுக பொதுச்செயலர் என்ற வகையில் படிவம்- பியில் முதல்வர் ஜெயலலிதா பெருவிரல் ரேகையை பதிந்திருந்தார்.

இது தொடர்பாக விளக்கம் அளித்திருந்த தேர்தல் ஆணையம், கையெழுத்திட இயலாத நிலையில் உள்ள ஒருவர் வேட்புமனுவில் பெருவிரல் ரேகை வைக்கலாம் என விளக்கம் தந்திருந்தது. இதனால் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் இல்லை என கூறப்பட்டது. ஆனால் மூத்த வழக்கறிஞர் துரைசாமியோ, வேட்பு மனு படிவம் ஏ-ல் போட்டுள்ள கையெழுத்தும் படிவம்-பியில் போட்டுள்ள கையெழுத்தும் ஒன்றாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அதிமுகவின் இரட்டை இலை சின்னம் கிடைக்கும்.

தற்போது பி படிவத்தில் கைரேகை வைக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுகவினரின் வேட்புமனுக்களே செல்லாது; அத்துடன் ஜெயலலிதாவின் பெயரை கையால் எழுதாமல் டைப் செய்திருப்பதும் கூட சட்டப்படி தவறானதே என்கிறார். விடாது கருப்பு!


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.