Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 4, 2016

முதல்வர் ஜெயலலிதாவின் முரட்டு பக்தர்: அந்தரத்தில் ...



தமிழக முதல்வரும், அதிமுகபொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக தொடர்கள் மத்தியில் இது சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.

     முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவருக்கு நோய் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்தது. லண்டனில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   இதற்கிடையில் அவர் உடல்நிலை பற்றிய வதந்திகளும் பரவி வருகிறது.
இந்த வதந்திகளாலும் அதிமுக தொண்டர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று மீண்டும் வர வேண்டும் என அதிமுகவினர் தமிழகம் முழுவதும் வேண்டுதல்கள் செய்து வருகின்றனர்.   இந்நிலையில் சென்னையில் அதிமுக தீவிர பக்தர் ஒருவர் முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி முதுகில் அலகு குத்தி பறவை காவடி எடுத்து வேண்டியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று வர வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.