October 13, 2016
திமுகவுக்கு ஒரே ஒரு ஓட்டு. காங்கிரஸ் வாக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல்
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக திருநாவுக்கரசர் நியமனம் செய்யப்பட்டதில் இருந்து காங்கிரஸ்-திமுக உறவில் விரிசல் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த பிளவு உள்ளாட்சி தேர்தல் தொகுதி உடன்பாட்டின்போது மேலும் பெரிதானது. இந்நிலையில் திமுகவுடனான கூட்டணியை தொடரலாமா? வேண்டாமா? என்பது குறித்து மாவட்ட தலைவர்களின் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் திமுகவுடன் கூட்டணியை தொடரலாம் என ஒரே ஒரு மாவட்ட தலைவர் மட்டுமே வாக்களித்தர். மீதி அனைத்து மாவட்ட தலைவர்களூம் தனித்தே போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடர்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
மாவட்ட தலைவர்கள் கூட்டத்திற்கு பின்னர் பேசிய திருநாவுக்கரசர், 'உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீடு தொடர்பாக திமுகவுடன் பேசினோம். சில இடங்களில் அதிருப்தி இருந்தது. இந்த நிலையில், தேர்தலும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. உள்ளாட்சித் தேர்தல் மீண்டும் நடைபெறலாம். அப்போது, திமுகவிடம் மீண்டும் இடஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவோம்' என்று கூறினார்.
திமுகவுக்கு ஒரே ஒரு ஓட்டு. காங்கிரஸ் வாக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 13, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 13, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.