Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 10, 2016

அஜித்தை தொடர்ந்து…ரஜினிக்கு வரும் முதல்வர் அழைப்பு?



தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் பிரபல திரைப்பட நடிகர் அஜித் குமார்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்ற செய்தி இணையத்தில் வைரலாக பரவியது.
ஆனால் இது குறித்து அஜித் இதுவரை எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் தமிழ் நாட்டின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தை தமிழகத்தின் முதல்வர் ஆக்குவதற்காக பி.ஜே.பி சார்பில் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக முதல்வரின் உடல் குறித்து தமிழ்நாட்டை விட டெல்லியில் தான் அதிக பேச்சு அடிபடுகிறதாம். திமுக தலைவர் கருணாநிதி முன்பு போல் பரபரப்பாக அரசியலில் இல்லை எனவும் முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அவரின் உடல்நிலை குறித்து உண்மையான் நிலவரங்கள் இன்னும் சரிவர தெரியவில்லை.
எனவே, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள பாஜக திட்டமிட்டிருக்கிறது.
பி.ஜே.பி. தமிழ்நாட்டில் கால் ஊன்றுவதற்கு இதை விட ஒரு அருமையான வாய்ப்பு கிடைக்காது எனவும், இதற்கு ரஜினியும் கூடவே இருந்தால் மிகவும் நன்றகாக இருக்கும் என பிஜேபியை சேர்ந்தவர்கல் சிலர் அமித்ஷாவிடம் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து அமித்ஷா பிரதமர் மோடியிடம் பேசிவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க இருப்பதாகவும், ரஜினியை எப்படியாவது இழுத்துவிட வேண்டும் என பி.ஜே.பி தரப்பு முழு முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 comment:

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.