July 10, 2017
ஆண்மையை அதிகரிக்கும் எளிய இயற்கை வைத்தியம்
குழந்தைப் பேறுக்கு முக்கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆண்மைத் தன்மை குறைபாட்டிற்காக, எத்தனையோ மருத்துவர்களையும், பொய் பிரச்சாரங்களை நம்பியும் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்காதீர்கள்.
இயற்கை முறையில், எந்த பின் விளைவுகளும் இன்றி நல்ல சிகிச்சை நம்மிடமே உள்ளது. உயர் ரக பேரீச்சம்பழம் ஒரு கிலோவும், தேன் (சுத்தமான தேன்) ஒரு கிலோவும் வாங்கிக் கொள்ளுங்கள். பேரீச்சம்பழங்களை ஒரு அகன்ற தட்டில் பரப்பி 3 மணி நேரம் வெயிலில் வைத்து, ஒரு சுத்தமான பீங்கான் பாட்டிலில் பத்திரப்படுத்துங்கள்.
அதனுடன், தேனை ஊற்றி மீண்டும் 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்துவிடுங்கள். தினமும் காலை உணவு சாப்பிட்ட 1/2 மணி நேரத்திற்குப் பிறகு 3 பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுவிட்டு, சிறிது வெந்நீர் அருந்துங்கள். இதேபோல், இரவிலும் உணவு சாப்பிட்ட பின்னர் 12 பேரீச்சம்பழங்களை உட்கொண்டுவிட்டு, வெந்நீருக்கு பதிலாக பசும்பாலை அருந்துங்கள். இப்படி 60 நாட்கள் தொடர்ந்து தேன் கலந்த பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு வந்தால் போதும். ஆண்மை சக்தி பெருகி விடும்.
ஆண்மையை அதிகரிக்கும் எளிய இயற்கை வைத்தியம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 10, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 10, 2017
Rating: 5
1 comment:
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.
Subscribe to:
Post Comments (Atom)


அப்படியா?
ReplyDelete