September 21, 2016
கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிக்கிறது பாஜக.. எடியூரப்பா அதிரடி பேட்டி
மாலை 6 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தை கர்நாடக முதல்வர் சித்தாரமையா கூட்டியுள்ளார். அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட உள்ளது. இவ்விரு கூட்டங்களும், தலைமைச் செயலகமான விதான சவுதாவில் வைத்து நடைபெற உள்ளது.
இதனிடையே, அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக, கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா அறிவித்துள்ளார். ஷிமோகாவில் இன்று காலை நிருபர்களிடம் பேசிய எடியூரப்பா, இதற்கு முன்பு நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டங்களில், பாஜக கூறிய ஆலோசனைகளை முதல்வர் சித்தராமையா மதிக்கவில்லை.
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காதீர்கள் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை வழங்கியும், சித்தராமையா தண்ணீர் திறப்பை உறுதி செய்துவிட்டார்.
காவிரியிலிருந்து வரும் 27ம் தேதிவரை வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை வாரியத்தை இன்னும் 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதுகுறித்து இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவையை கூட்டி விவாதிக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.
மாலை 6 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தையும் சித்தாரமையா கூட்டியுள்ளார். அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட உள்ளது. இவ்விரு கூட்டங்களும், தலைமைச் செயலகமான விதான சவுதாவில் வைத்து நடைபெற உள்ளது.
இதனிடையே, அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக, கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா அறிவித்துள்ளார். ஷிமோகாவில் இன்று காலை நிருபர்களிடம் பேசிய எடியூரப்பா, இதற்கு முன்பு நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டங்களில், பாஜக கூறிய ஆலோசனைகளை முதல்வர் சித்தராமையா மதிக்கவில்லை. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காதீர்கள் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை வழங்கியும், சித்தராமையா தண்ணீர் திறப்பை உறுதி செய்துவிட்டார்.
எனவே, இன்றைய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பது சரியாக இருக்காது. சித்தராமையா,அவசரமாக சட்டசபையை கூட்டி காவிரி பற்றி விவாதிக்க முன்வர வேண்டும் என்றார் எடியூரப்பா. பாஜகவை சிக்கலில் மாட்டி விடும் வகையில் அனைத்து கட்சி கூட்டத்தில் சித்தராமையா சில முடிவுகளை எடுக்க கூடும் என்ற யூகத்தின்பேரில் எடியூரப்பா இவ்வாறு பேட்டியளித்ததாக கூறப்படுகிறது.
கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிக்கிறது பாஜக.. எடியூரப்பா அதிரடி பேட்டி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 21, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 21, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.