Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 24, 2016

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமாரின் இறுதி ஊர்வலத்தில் வன்முறை



கோவையில் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமாரின் இறுதி ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டதால், அங்கு பதட்டம் நிலவி வருகிறது.

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிகுமார் மர்ம நபர்களால் நேற்றிரவு கொலை செய்யப்பட்டார். அவரது இறுதி ஊர்வலம் துடியலூர் சும்பமணியம்பாளையத்தில் இன்று நடைபெற்றது. இதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின்போது, ஏற்பட்ட திடீர் வன்முறை காரணமாக
போலீஸ் ஜீப்பிற்கு தீ வைக்கப்பட்டது.

மேலும், துடியலூர் பகுதியில் உள்ள 3 கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும், புகை மூட்டம் காரணமாக தீயை அணைப்பதில் பெருத்த சிரமம் ஏற்பட்டது. மேலும், போராட்டக்காரர்கள் கல்வீச்சிலும் ஈடுபட்டனர்.

இத்தகைய சம்பவங்களால், கோவை துடியலூர் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால், ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.