Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 23, 2016

கருப்பு இனத்தவர் கொல்லப்பட்டதால் வன்முறை அமெரிக்க நகரத்தில் நெருக்கடி நிலை அமல்


அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாகாணத்தில் சார்லட் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை கருப்பு இனத்தை சேர்ந்த கீத் லாமண்ட் ஸ்காட் (வயது 43) என்பவர் போலீஸ் அதிகாரி ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஒரே வாரத்தில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மூன்றாவது கருப்பு இன நபர் ஸ்காட் என்பதால், அங்கு கருப்பு இன மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு கண்டன போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று முன்தினம் (புதன்கிழமை) சார்லட் நகரில் கண்டன போராட்டங்கள் நடைபெற்றன. முதலில் அமைதியாக தொடங்கிய போராட்டத்தில் பின்னர் வன்முறை வெடித்தது. துப்பாக்கிச்சூடும் நடைபெற்றது. இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். முதலில் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. பின்னர் அவர் பிழைத்து விட்டதாக டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டது.

போலீசாரை நோக்கி போராட்டக்காரர்கள் பாட்டில்களையும், வெடிபொருட்களையும் வீசினர். பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். வன்முறையை அடக்க போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளையும், கையெறி குண்டுகளையும் வீசினர்.

தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால், அந்த நகரில் நெருக்கடி நிலையை அமல்படுத்தி வடக்கு கரோலினா மாகாண கவர்னர் பேட் மெக்குரோரி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.