Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 4, 2016

ஒடிஷாவில் மகளின் உடலை 6 கிலோ மீட்டர் சுமந்து சென்ற அவலம்!



மருத்துவமனைக்கு செல்லும் வழியில், ஆம்புலன்சில் சிறுமி உயிரிழந்ததை அடுத்து, பாதி வழியிலேயே ஓட்டுநர் இறக்கி விட்டதால், மகளின் உடலை ஆறு கிலோ மீட்டர் தூரம் தந்தை சுமந்து சென்ற சம்பவம் ஒடிஷாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஷாவின் மல்கங்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த பர்ஷா என்ற 7 வயது சிறுமி உடல் நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து, மைத்திலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து அரசு ஆம்புலன்சில் மல்கங்கிரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சிறுமியுடன், அவரது தந்தையும், தாயும் சென்றுள்ளனர். பாதி வழியில் சிறுமி உயிரிழந்ததை அறிந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், சிறுமியின் உடலுடன் அவரது பெற்றோரை அங்கேயே இறக்கிவிட்டு சென்றுள்ளார்.
இதனால், தனது மகளின் உடலை 6 கிலோ மீட்டர் தூரம் தந்தை தூக்கிச் சென்றுள்ளார். சாலையில் சென்றவர்கள் இதுபற்றி விசாரித்து, மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, வேறு ஒரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில், அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து, ஆம்லன்ஸ் ஓட்டுநர் மற்றும் உடன் சென்ற மருத்துவமனை ஊழியர்கள் மீது, மாவட்ட மருத்துவ கண்காணிப்பாளர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இது இரக்கமற்ற செயல் என்றும், காரணமானவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.