புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கும் மத்தியப் பல்கலைக்கழகத்தில், குறித்த நேரத்தில் செமஸ்டர்கள் நடக்கிறதோ, இல்லையோ மாதத்துக்கு நான்குமுறை போராட்டங்கள் நடந்துவிடுகின்றன. சென்ற வருடம் முன்னாள் துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியைப் பதவிநீக்கம் செய்யக்கோரிய போராட்டம் மாதக்கணக்கில் மாணவர்களால் நடத்தப்பட்டது. மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்கள், மிரட்டல்கள், விடுதி மற்றும் கல்லூரிகளில் அடிப்படை வசதியின்மை என்று அங்கு நடக்கும் போராட்டங்களைப் பட்டியிலிட்டுக்கொண்டே போகலாம்.
இந்த நிலையில் இங்கு இயங்கிவரும் நிகழ்கலைத் துறைக்கு, கடந்த 1-ம் தேதி முதல் பூட்டுப் போட்டு 24 நாட்களாகப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர், இங்கு படிக்கும் 32 மாணவர்கள். போராட்டத்தில் இருந்த மாணவர்களிடம் பேசினோம், “தமிழகத்தில் இருந்த அனைத்து நாடகத் துறைக்கும் மூடுவிழா நடத்தப்பட்டுவிட்ட நிலையில் எஞ்சியிருப்பது இது மட்டும்தான். கூத்துப்பட்டறையில் மூன்று மாதம் டிப்ளமா பயில்பவர்களுக்கு இருக்கும் மரியாதைகூட இங்கு எம்.ஏ., படிப்பவர்களுக்கு இல்லை. அதற்குக் காரணம் அங்கிருக்கும் இயக்குநர் சினிமா, நாடகம் சார்ந்த முக்கியத் துறைகளில் சிறந்துவிளங்கும் நபர்களைச் சிறப்பு விருந்தினர்களாக அழைத்துவந்து மாணவர்களுடன் கலந்துரையாட வைக்கிறார்கள். ஆனால் இங்கு இருக்கும் துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் தங்களை வளர்த்துக்கொள்ளும் வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். மாணவர்களை வளர்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்குத் துளிகூடக் கிடையாது. இவர்களிடம் படித்துவிட்டு நல்ல நிலையில் இருக்கும் ஒருவரைக்கூட இவர்களால் கை காட்ட முடியாது. துறைரீதியாக ஏற்பட்ட மன அழுத்தங்களின் காரணமாகவே இரண்டு ஆசிரியர்கள் இதுவரை இங்கு தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர்.
''கழிப்பறை வசதிகள்கூட இல்லை!''
ஒவ்வொரு செமஸ்டரிலும் நாடக உருவாக்கம் என்பது இந்தத் துறையில் மிக முக்கியமான ஒன்று. அந்த நேரத்தில் மாணவர்கள் தாங்கள் படித்ததையும் பயிற்சி எடுத்ததையும் வைத்துச் சொந்தமாக நாடகங்களை உருவாக்க வேண்டும். அதற்குத் துறை சார்ந்தவர்கள் பிரபலங்களை அழைத்துவந்தோ, ஆசிரியர்களைவைத்தோ பயிற்சி அளிக்க வேண்டும். ஆனால், அப்படி எந்தவித பயிற்சியும் இல்லாமல் செய்துவிட்ட பிறகு எப்படி மாணவர்களால் நாடகத்தை இயற்ற முடியும்? மேலும், முழுநாளும் படித்துவிட்டு அப்படியே தேர்வெழுதும் துறை இது கிடையாது. வகுப்புகள் முடிந்தவுடன் சக மாணவர்களுடன் சேர்ந்து நாடகப் பயிற்சி மேற்கொள்வார்கள். ஆனால், கல்லூரி வளாகத்துக்குள் நாடகப் பயிற்சியை செய்யக் கூடாது என்ற திடீர் சட்டத்தைப் போட்டிருக்கிறது நிர்வாகம். இவை அனைத்துக்கும் காரணமே துணைப் பேராசிரியர் சுப்பையாதான் அவரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும். மற்ற துறைகளுக்கு என்ன கட்டணமோ அதே கட்டணத்தைத்தான் நாங்களும் செலுத்திப் படிக்கிறோம். ஆனால், அவர்களுக்கு இருக்கும் வசதிகளில் ஒன்றுகூட எங்களுக்கு இல்லை. ஏ.சி வகுப்பறை, குடிநீர் என அனைத்து வசதிகளும் இருப்பதுபோலக் காட்டிவிட்டு இங்கே மரத்தடியில்தான் எங்களுப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கழிப்பறை வசதிகள்கூட இல்லை. இந்த வசதிகளையெல்லாம் உடனே செய்து தரவேண்டும்” என்று கொந்தளித்தனர்.
இதுகுறித்து சுப்பையாவிடம் பேசினோம். “இன்றைய நவீன டெக்னாலஜி வசதிக்குத் தகுந்தமாதிரி மாணவர்களின் பாடத்திட்டங்களை அப்டேட் செய்ய வேண்டும். ஆனால், இதற்கான எந்த வேலைகளையும் செய்யாமல் அடுத்த வருடம் பணி ஓய்வுபெறுவதற்கு முன் தனக்கு வேண்டப்பட்ட இரு மாணவர்களை இந்தத் துறையில் விதிகளை மீறிப் பணியில் சேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஒரு தரப்பு மாணவர்களைப் போராட்டத்தில் ஈடுபட வைத்திருக்கிறார் டீன் ராஜு. முழுக்க முழுக்க அவரது சுயநலத்துக்காக மாணவர்களைப் பயன்படுத்துகிறார்” என்றார்.
டீன் ராஜு, “மாணவர்களுக்கும் அந்தச் சுப்பையாவுக்கும்தான் பிரச்னை. இதில் தேவையில்லாமல் அவர், என்னை வம்புக்கு இழுத்துவிடுகிறார்” என்றார்.
இந்த நிலையில், துணைப் பேராசிரியர் டாக்டர் எம்.சுப்பையாவை பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான லாஸ்பேட்டை சமுதாயக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்தும், மற்றொரு துணைப் பேராசிரியரும் துறைத் தலைவருமான டாக்டர் வி.ஆறுமுகத்தை, சுப்பிரமணிய பாரதி தமிழ்மொழி மற்றும் இலக்கியப் பள்ளிக்குப் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது பல்கலைக்கழக நிர்வாகம்.
ஆனால், ''எங்களின் போராட்டத்தை முடக்க நடக்கும் நாடகமே இது. சம்பந்தப்பட்ட ஆசிரியரைப் பணிநீக்கம் செய்யும்வரை எங்களது போராட்டம் தொடரும்” என்கின்றனர் போராட்ட மாணவர்கள்.
தமிழ் நாடகப் பேராசிரியர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில், ஆரம்பிக்கப்பட்ட இந்தத் துறைக்கு இதுதான் நிலைமையா என்று ஆதங்கப்படுகின்றனர் நாடகக் கலைஞர்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.