August 31, 2016
நாயை தூக்கி எறிந்த எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாட்ஸ் அப்பில் பரவிய ஒரு அதிர்ச்சி வீடியோவில் எம்பிபிஎஸ் மாணவர் ஒருவர் மொட்டை மாடியில் இருந்து ஒரு நாயை தூக்கி எறிந்த வீடியோ அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதில் அந்த நாய் படுகாயம் அடைந்த நிலையில் நாயை தூக்கி எறிந்தவருக்கும், அதை வீடியோ எடுத்தவருக்கும் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி, விலங்குகள் நல ஆர்வலர் ஆண்டனி கிளமெண்ட் ரூபன் என்பவர் சென்னை குன்றத்தூர் போலீசில் இதுகுறித்து புகார் செய்திருந்தார். அந்தப் புகாரின் பேரில் குன்றத்தூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து மாடியில் இருந்து நாயை தூக்கி வீசிய மாணவரையும் வீடியோ எடுத்த மாணவரையும் கைது செய்தன.
இந்த வழக்கு ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இரு மாணவர்களுக்கும் தலா ரூ.2 லட்சம் அபாரதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். ஏற்கனவே இரு மாணவர்களையும் சம்பந்தப்பட்ட கல்லூரி சஸ்பெண்ட் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாயை தூக்கி எறிந்த எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 31, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 31, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.