Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 22, 2016

வீட்டில் தனியாக இருந்த பெண்களை கட்டிப்போட்டு நகைகள் துணிகர கொள்ளை!



நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்களை கட்டிப்போட்டு, 48 சவரன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
திருச்செங்கோட்டை அடுத்த ஆனைக்கல்காடு பகுதியை சேர்ந்த விவசாயி ராமசாமியின் மனைவி மற்றும் 2 மகள்கள் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், வீட்டின் உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்களை கட்டிப்போட்டி, பீரோவில் இருந்த 48 சவரன் நகைகள் மற்றும் 63 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
தகவலறிந்த காவல்துறையினர், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து கொள்ளை நடந்த வீட்டில் மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் நேரில் ஆய்வு செய்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.