Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 19, 2016

தன் மரணத்தை தானே வடிவமைத்த பெட்ஸி!


அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர், 41 வயதான பெட்ஸி டேவிஸ்.  Amyotrophic Lateral Sclerosis என்ற, குணப்படுத்த முடியாத நரம்புக்கோளாறு நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு மரணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் அதை அடையும் காலம்வரை தாங்கமுடியாத வேதனையுடன் பெட்சி காத்திருக்க வேண்டிய நிலை. இந்நிலையில்தான், ‘மருத்துவர் உதவியுடன் தற்கொலை’ assisted suicide என்ற முடிவை எடுத்தார் பெட்சி.

அமெரிக்காவில், இந்த அசிஸ்டட் சூஸைடை சட்டப்படி அங்கீகரிக்கும் ஐந்தாவது மாகாணமாக கலிஃபோர்னியா சமீபத்தில்தான் இணைந்திருக்க, அதன்படி மருத்துவர் முன்னிலையில் அளவுக்கதிக டோஸில் மருந்து உட்கொண்டு தற்கொலை செய்துகொள்ளும் முடிவை எடுத்த பெட்ஸி, அதை செயல்படுத்தியது உருக்கம்.

கடந்த ஜூலை மாதத் தொடக்கத்தின் வார இறுதியில் நாட்களில் ஒரு விழா ஏற்பாடு செய்திருந்த பெட்ஸி, பல்வேறு நாடுகளிலும் இருந்த 30க்கும் மேற்பட்ட தன் நண்பர்களை, ‘அன்பிற்குரிய தைரியமான மறுபிறப்பு பங்காளர்களே... என் இறுதிப்பயணத்தை தொடக்கிவைக்க வாருங்கள்’ என்று மின்ஞ்சலில் அழைத்தார். நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும், ‘உங்களுக்கு என்ன தோணுகிறதோ செய்யுங்கள், பேசுங்கள். ஆனால் என் முன் யாரும் அழக்கூடாது’ என்ற விதிமுறையைச் சொன்னார். தாங்கமுடியாத வேதனையில் இருந்து மரணம் அவருக்கு விடுதலை கொடுக்கும் என்பதைப் புரிந்துகொண்ட அவரின் நண்பர்களும் அதற்கு இசைந்தனர்.

பெட்ஸிக்கு பிடித்த பீட்ஸா, காக்டெயில், திரைப்படம், ரியாலிட்டி டான்ஸ், இசை என அனைத்தும் அங்கு நிகழ்ந்தன. இறுதியில், பெட்ஸியின் சகோதரி விருந்தினர்கள் அனைவருக்கும், அவர்கள் பெட்ஸியின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லும் குறிப்புடன் ஒரு பரிசளித்தார்.

நிகழ்வின் இறுதியில், ஜப்பானிய உடை அணிந்துவந்த பெட்ஸி, தன் ஆயுளின் கடைசி சூரிய அஸ்தமனத்தைப் பார்த்தார். குறிக்கப்பட்ட மாலை 6:45 மணிக்கு அவரின் மருத்துவர் மற்றும் சகோதரியின் முன்னிலையில் மருந்துகள் கொடுக்கப்பட்டன. நான்கு மணி நேரம் கழித்து பெட்ஸியின் உயிர் பிரிந்தது.

‘பெட்ஸி, அவர் விரும்பிய வகையில் அழகான மரணத்தை தனக்கு ஏற்படுத்திக்கொண்டார்’ என்றார் பெட்சியின் நண்பர் ஆல்பெர்ட்.

ரெஸ்ட் இன் பீஸ் பெட்ஸி!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.