Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 5, 2016

அமெரிக்காவில் டேலண்ட் லைவ் நிகழ்ச்சியில் நடந்த விபத்து


அமெரிக்காவில் பல டேலண்ட் ஷோக்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அது போல அமெரிக்காவின் பிரபலமான அமெரிக்க காட் டேலண்ட்  (America’s Got Talent) என்ற பிரபல லைவ் ஷோ தனியார் தொலைகாட்சி ஒன்றில் கடந்த செவ்வாய் கிழமை ஒளிபரப்பபட்டது.

இதில் தங்களது திறமையை நிரூபிக்க, ஸ்டண்ட் நடிகர் ரியான்ஸ்டாக் மற்றும் அவருடன் இணைந்து ஆம்பர்லின் பல சாகசங்களை செய்து காட்டினர்.

இதில் ஒரு பகுதியாக ரியான்ஸ்டாக் ஒரு நீண்ட கம்பியை எடுத்து தனது வாயில் உள்ளே திணித்தார், அதன் முடிவு பகுதியை தன் வாயில் வைத்து, அதை பார்த்து நேராக தீப்பொறி அம்பு விடும்படி ஆம்பர்லின்  விடம் தெரிவித்தார்.

ஆம்பர்லின் அதை குறிபார்த்து விடும் போது, தவறுதலாக அவரது கழுத்து பகுதியை தாக்கியது. இதனால் நடுவர் உட்பட அரங்கமே சற்று அமைதியானது.

ஆனால் ரியான்ஸ்டாக்  தான் நலமாக உள்ளதாகவும், ஒன்றுமில்லை என கூறியுள்ளார். நடுவர்கள் கேடி குலாம் இம்லோர் ஸ்டாக் கூறியதை அடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இது இயந்திர கோளரால் ஏற்பட்டது எனவும், ஆனால் ரியான்ஸ்டாக் ஒரு அதிர்ஷ்டசாலி என நடுவர்களில் ஒருவரான ஸ்டாக்  தனது டடுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.