கோவை சிங்காநல்லூர் - வெள்ளலூர் இடையே உள்ள ரயில்வே பாதையை கடக்கும் பொருட்டு கட்டப்பட்ட மேம்பாலத்தை நேற்று முதல் பயன்படுத்தத் தொடங்கினர் பொதுமக்கள். இதனால் கோவை மாநகரின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் செல்லும் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் சாலையில் ரயில்வே பாதை உள்ளது. இந்த ரயில்வே கிராசிங்கால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது.
இதனையொட்டி பொதுமக்கள் தரப்பில் இங்கு ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இங்கு மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்த பாலம் கட்டுவதற்காக ரூ.25.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. சிங்காநல்லூர் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள அரசுப் பள்ளி அருகில் இருந்து 800 மீட்டர் நீளத்தில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது. இதில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 36 தூண்களும், ரயில்வே நிர்வாகம் சார்பில் 2 தூண்களும் என மொத்தம் 38 பிரம்மாண்ட தூண்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் பாலத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு தயார் நிலையில் பாலம் இருந்தது. வேலை முடிந்து 2 மாதங்கள் ஆகியும் பாலம் திறக்கப்படவில்லை. இதனால் பாலம் கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டு வந்தது. நாள்தோறும் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டு வந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை தாங்களாகவே பாலத்தை திறந்து உபயோகப்படுத்த தொடங்கினர். கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக இருந்த போக்குவரத்து நெருக்கடி நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
இது குறித்து இப்பகுதி மக்கள் கூறும்போது, ‘மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாது இருந்ததற்கு அமைச்சர்கள் திறப்பு விழா தேதி கொடுக்கப்படாததே காரணம் என்று அதிகாரிகள் சொல்லி வந்தனர். எனவேதான் பொறுமையிழந்து இன்று பொதுமக்களே பாலத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்’ என்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.