விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் தனிப் பிரிவு போலீசாரின் 'அட்ராசிட்டி' ரொம்ப ஓவராகவே போய்விட்டது என்று புலம்புகின்றனர் அதிகாரிகள்.
எந்த ஒரு போலீசாரும், ஒரு காவல் நிலையத்தில் 3 வருடத்திற்கு மேல் பணிபுரிய கூடாது. ஆனால் இக்காவல் நிலையத்தில் உள்ள தனிப்பிரிவு போலீசார் மட்டும் சுமார் 15 வருடத்திற்க்கு மேல் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு வீடுகள், சொந்தம் பந்தம் எல்லாமே இங்குதான். அதனால் இவர்களுக்கு திருக்கோவிலூரின் இண்டு இடுக்கு எல்லாமே அத்துப்படி. இன்னும் சொல்லப்போனால் காவல் நிலையமே இவர்கள் கண்ட்ரோல்தான் என்பது எழுதப்படாத சட்டம்.
ட்ரான்ஸ்பரில் போனாலும் பத்தே நாட்களில் மீண்டும் இதே இடத்துக்கு வந்துவிடுவார்கள். அந்தளவுக்கு சக்தி உடையவர்களாக வலம் வருகிறார்கள் அவர்கள். வாங்கும் சம்பளத்திற்கு உண்மையாக உழைக்கவேண்டும். படிப்பறிவு இல்லாத, ஏழ்மையான இப்பகுதி மக்களின் முன்னேற்றத்திற்காக ஏதாவது செய்யவேண்டும் என்று நினைக்கிறார்கள் இங்கிருக்கும் அதிகாரிகள். அவர்களுக்கு முட்டுக் கட்டையாக இருப்பதே இவர்கள்தான். இங்கு மணல் திருட்டு படு ஜோராக நடக்கிறது.
அந்த மணல் கடத்தல் கொள்ளையர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் லாரிகளையும், போதையில் திரியும் ஆசாமிகளின் இருசக்கர வாகனங்களையும் பிடித்து அதிகாரிகள் வழக்குப் போட்டுவிட்டால் போதும், அவர்களுக்காக அந்த இடத்தில் முதலில் ஆஜராவது இவர்கள்தான். அந்தளவுக்கு விசுவாசமானவர்கள்.
"யாரைக் கேட்டு வழக்குப் போட்டீர்கள். இதெல்லாம் பெரிய இடத்து விவகாரம். இவ்வளவு நாட்கள் இருக்கிறோம். எங்களுக்கு தெறியாதா. மரியாதையா விட்டுவிடுங்கள்" என்று அதிகாரிகளையே மிரட்டுவார்கள். அப்படியில்லையென்றால், அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்களை தூண்டிவிட்டு அந்த இடத்தின் தான் நல்லவர்களாக சித்தரித்துக்கொள்வார்கள். இதையெல்லாம் எஸ்பியும் கண்டுகொள்ளாமல், அவர்கள் சொல்வதைத் தான் கேட்பார். இதையும் மீறி யாராவது வழக்குப் போட்டுவிட்டால் அவர்களை எஸ்பியிடம் போட்டுக் கொடுத்துவிடுவார்கள். பிறகு அந்த அதிகாரிகள் காரணம் இல்லாமல் தண்டிக்கப்படுவார்கள். அப்படித்தான் ஒரு எஸ்.ஐ. தண்டிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகிப்போனார்.
ஒரு நாளைக்கு இத்தனை வழக்குப் போடவேண்டும் என்று உயரதிகாரிகள் உத்தரவிடுகிறார்கள். வழக்கு போட்டால் இவர்கள் மிரட்டுகிறார்கள். நாங்கள் யாருக்குத்தான், எப்படித்தான் வேலை செய்வது என்று தெரியவில்லை" என்று குமுறுகிறார்கள் உண்மையான அதிகாரிகள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.