நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தும் 'அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சி' யில் தமிழக அமைச்சர்கள், துணை சபாநாயகர் என பலரும் பங்கேற்ற நிலையில், தமிழக அரசின் பெயரும், ஜெயலலிதாவின் பெயரும், படமும் எங்கும் இல்லாததால் அமைச்சர்கள், துணை சபாநாயகர் உள்ளிட்டோர் கடும் அதிருப்தியடைந்தார். மேடையிலேயே அதிருப்தியை அமைச்சர்கள் உள்ளிட்டோர் வெளிப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் மாநில அமைச்சர்கள் பங்கேற்கும் விழாவில், ஒரு இடங்களில் கூட தமிழக அரசு என்ற பெயரோ, முதல்வர் ஜெயலலிதாவின் படமோ, அவரின் பெயரோ, அரசு திட்டங்களின் அறிவிப்புகளோ இல்லாமல் இருந்து நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? நிச்சயம் பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் அப்படி ஒரு விழா கோவையில் இன்று நடந்தது. நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்யும் வகையில் நடத்தப்பட்ட வேளாண் கண்காட்சியில்தான் இந்த நிலைமை.
கோவை, கொடீசியா வளாகத்தில் ஆண்டுதோறும் 'கொடீசியா அக்ரி இன்டெக்ஸ்' எனும் வேளாண் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான கண்காட்சி நேற்று துவங்கியது. வரும் 18ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியில், இன்று அக்ரி இன்டெக்ஸ் மலர் வெளியீடு மற்றும் கருத்தரங்க துவக்க விழா நிகழ்வு நடந்தது. இந்த விழாவில் தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கோவை மேயர் ராஜ்குமார், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

ஒட்டுமொத்தமாய் தமிழக அரசின் பிரதிநிதிகளாக அமைச்சர்கள், துணை சபாநாயகர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என ஏராளாமானோர் பங்கேற்ற இந்த கண்காட்சியில் எந்த இடத்திலும் தமிழக அரசின் சின்னமோ, தமிழக அரசின் பெயரோ, முதல்வரின் பெயரோ, படமோ பயன்படுத்தப்படவில்லை. மாறாக இந்திய அரசின் சின்னம் மட்டும் இடம்பெற்றிருந்தது. இதை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவும் இல்லை.
இந்நிலையில் விழாவில் பேசிய தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி, "விவசாயிகளுக்காக பல திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் எந்த இடத்திலும் தமிழக அரசின் திட்டங்களை நீங்கள் கண்காட்சியில் வைக்கவில்லை. இது வருத்தமளிக்கிறது" என பிரச்னையை ஆரம்பிக்க, அடுத்தடுத்து பேசியவர்கள் கொந்தளித்தனர்.
அடுத்து பேசிய மாவட்ட கலெக்டர் ஹரிஹரனும் இதையே பேசினார். "விவசாயிகளுக்காக அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதைப்பற்றி எல்லாம் கண்காட்சியில் வைக்காமல் விட்டிருப்பது சரியல்ல. அரசின் சின்னம் கூட எங்கும் பொறிக்கப்படவில்லை," என வருத்தப்பட்டார். துணைவேந்தரும், கலெக்டரும் இதை சுட்டிக்காட்டியதையடுத்து, அனைவரும் இதைப்பற்றியே பேசினர்.
இந்த நிலையில் மைக் பிடித்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், "தமிழக அரசு, சிறந்த வேளாண் உற்பத்திக்கான விருதை தொடர்ந்து 3 ஆண்டுகளாக பெற்று வருகிறது. அரசின் தடையில்லா மின்சாரத்தால் விவசாயிகள் மட்டுமல்லாது தொழில்துறையினரும் பலன் பெற்றுள்ளனர். ஆனால் தமிழக அரசின் திட்டங்களை இந்த கண்காட்சியில் முன்னிலைப்படுத்தாதது வருத்தமளிக்கிறது. வரும் காலங்களில் இதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்," என்றார்.

இறுதியாக பேசிய வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, "இந்த விழாவை சிறப்பிக்க எங்களையெல்லாம் தமிழக முதல்வர்தான் அனுப்பினார். உங்களை மதித்து எங்களை அனுப்புகிறார்கள். ஆனால் தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நீங்கள் எந்த முக்கியத்துவத்தையும் கொடுக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் குறையோடுதான் இருக்கிறது," என வருத்தப்பட்டார்.
இன்னும் இரு நாட்கள் கண்காட்சி நடக்க உள்ளது. அனேகமாக நாளை முதல்வரின் படங்களும், தமிழக அரசின் சின்னமும் இடம்பெறக்கூடும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.