Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 7, 2016

பணம்!-சிறுகதை


ஓர் ஊரில் பெருஞ்செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவனோ பொறுப்பு மிகுந்தவனாக நல்லவனாக விளங்கினான். இளையவனோ, தீயவனாக யாருக்கும் அடங்காதவனாக இருந்தான்.
சாகும் நிலையில் இருந்தார் செல்வந்தர். தன் செல்வத்தை இரண்டு மகன்களுக்கும் ஏற்றத் தாழ்வின்றிப் பிரித்துத் தந்துவிட்டு இறந்தார்.
மூத்தவனோ செல்வம் வந்ததற்காகப் பெருமிதம் கொள்ளவில்லை. பொறுப்பு உள்ளவனாக நடந்து கொண்டான். அந்தச் செல்வத்தைப் பல மடங்கு பெருக்கினான். ஏழை எளியவர்க்கு நிறைய உதவி செய்தான்.
ஊர் மக்கள் எல்லாரும் அவனைப் புகழ்ந்து பேசத் தொடங்கினர். இளையவனோ செல்வம் தன் கைக்கு வந்தவுடன் தலைகால் புரியாமல், ஆடத் தொடங்கினான். மேலும், நிறைய கெட்ட பழக்கங்கள் அவனிடம் குடி கொண்டன. யாருடைய அறிவுரையும் அவன் செவியில் ஏறவில்லை. கெட்ட பழக்கங்கள் காரணமாக அவன் உடல்நிலை கெடத் தொடங்கியது.
மருத்துவர்களும், "இனி அவன் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை!' என்றனர்.
சாகும் முன், அவன் தன் நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்தான்.
""நான் இவ்வளவு இளமையில் சாவதற்குக் காரணம் என் தந்தைதான்,'' என்று அழுதான்.
இதைக் கேட்டு எல்லாரும் திகைத்து நின்றனர்.
அவர்களைப் பார்த்து, ""என் தந்தை ஏராளமான செல்வத்தைத் தந்துவிட்டுப் போனார். அந்தச் செல்வம் இல்லையானால், நான் கெட்டு அலைந்திருக்க மாட்டேன். இவ்வளவு விரைவில் சாகவும் மாட்டேன். எனக்கு சின்ன வயதிலேயே நிறைய செல்லம் கொடுத்து, கண்டிப்பு இல்லாமல் வளர்த்தாலும் நான் கெட்டு குட்டிச் சுவராகி விட்டேன். பிள்ளைகளை இப்படி வளர்க்காதீர்கள்,'' என்றும் சொல்லி விட்டு தன் உயிரை விட்டான்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.