மேற்கு வங்க மாநிலம் புர்துவான் ரயில் நிலையத்தில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய முகமது மொசுருதீன் (28) என்பவரை உளவுத்துறை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். மேற்கு வங்க மாநிலம், பிர்பாம் மாவட்டம் லாப்பூர் கிராமத்தை சேர்ந்த முகமது மொசுருதீன், கடந்த 6 ஆண்டுகளாக திருப்பூர் மங்கலம் ரோடு ஆண்டிப்பாளையம் கோழிப்பண்ணை பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து மளிகை கடை வைத்து வியாபாரம் நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், ஃபேஸ்புக் மூலமாக ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததோடு, செல்போனில் இருந்து சிரியாவுக்கும், மேற்கு வங்கத்தில் உள்ளவர்களுடனும் அடிக்கடி பேசி வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் திருப்பூரே அதிர்ந்து போனது.
இந்த நிலையில், ஐஎஸ் அமைப்பில் சேரப்போவதாக கருதப்பட்ட கேரள இளைஞர்கள் இரண்டு பேரை திருப்பூரில் கைது செய்யப்பட்டிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த 17 பேர் ஐ.எஸ். அமைப்பில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் கேரளாவில் இருந்து 21 பேர் மாயமாகி இருப்பதாகவும், இவர்களில் 17 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், மற்ற நான்கு பேர் பாலக்காடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
இதனிடையே, இவர்கள் சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் சென்று அங்கு ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்து விட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கேரளாவில் மாயமான 21 பேரில் 2 பேரை திருப்பூரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முகமது சமீர், சல்மான் இவர்கள் இருவரும் கேரள மாநிலம் பாலக்கோட்டில் இருந்து வந்து கடந்த 20 நாட்களாக திருப்பூரில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்து உள்ளனர். அவர்களின் செல்போன் சிக்னல் மூலம் கண்டறிந்த கேரள காவல்துறையினர், திருப்பூர் காவல்துறையினர் உதவியுடன் அவர்கள் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கஞ்சா பயன்படுத்தியதால் சல்மானை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும், இதனால் சல்மான், தனது நண்பர் சமீரை அழைத்து கொண்டு திருப்பூருக்கு வந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே ஐஎஸ் தீவிரவாதி முகமது மொசுருதீன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்ததாக கருதப்பட்ட கேரளாவை சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருப்பது திருப்பூர் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.