Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 10, 2016

கெஜ்ரிவாலின் முதன்மைச் செயலாளரை சிக்க வைத்த ஆடியோ பேச்சு


டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முன்னாள் முதன்மைச் செயலாளர் ராஜேந்திர குமார் ஊழல் வழக்கில் சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் லஞ்சம் பெறுவது தொடர்பாக சில ஆடியோ கிளிப்புகளை ஆய்வு செய்ததில்  ராஜேந்திர குமாரின் 'வாய்ஸ் 'உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனியார்  நிறுவனமான என்டோவர் சிஸ்டம் பிரைவேட் நிறுவனத்துக்கு  ரூ.57 கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களை டெல்லி மாநில அரசு வழங்குவதற்கு ராஜேந்திர குமார் லஞ்சம் பெற்றதாக சிபிஐ குற்றஞ்சாட்டி இருந்தது.  ராஜேந்திர குமாரின் ஆடிட்டர் அமித்குமார், ராஜேந்திரகுமாருக்கு பதிலாக லஞ்ச பணத்தை பெற்றதாகச் சொல்லப்பட்டது

டெல்லி, நொய்டா, ஆக்ரா உள்ளிட்ட 6 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி, ஏராளமான ஆடியோ கிளிப்புகளையும் கைப்பற்றியது. அமித்குமாரின் வீட்டில் இருந்தும்  ரூ. 27 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. ஆடியோ கிளிப்புகளில்  இருப்பது ராஜேந்திர குமாரின் வாய்ஸ்தானா? என்பதை உறுதி செய்வதற்காக டெல்லியில் உள்ள மத்திய தடவியல் ஆய்வு மையத்தில் சோதனை நடத்தப்பட்டது.

ஆடியோ  பதிவுகளில் பேசியிருப்பது  ராஜேந்திரகுமார்தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்த வழக்கு தொடர்பாக  கடந்த திங்கட்கிழமை, கெஜ்ரிவாலின் முன்னாள் முதன்மைச் செயலாளர் ராஜேந்திரகுமார்,  துணை முதன்மைச் செயலாளர் தருண் சர்மா ஆகியோரை சி.பி.ஐ கைது செய்திருந்தது.  என்டோவர் நிறுவனத்தின் இயக்குனர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.