அணியின் பேருந்தை தவறவிட்டால், வீரர்களுக்கு 50 டாலர் அபராதம் விதிக்கப்படும் என இந்திய அணியின் பயிற்சியாளர் கும்ப்ளே அதிரடி காட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். தற்போது இந்திய அணி, மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. ஜுலை 14ம் தேதி மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத் தலைவர் அணியுடன், இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த தொடருக்கு பிறகு, இந்திய அணி வலுவான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுடன் மொத்தம் 13 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. தொடர்ச்சியான போட்டிகளுக்கு முன்னதாக, இந்திய அணி வீரர்களிடையே கட்டுப்பாடு நிறைந்த ஒழுக்கத்தை விதைத்து விட பயிற்சியாளர் கும்ப்ளே திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, பயிற்சிக்கு லேட்டாக வந்தாலோ, டீம் பஸ்சை தவறவிட்டாலோ வீரர்களுக்கு 50 டாலர் அபாராதம் விதிக்கப்படும். அதுபோல் ஒவ்வொரு 4 நாட்களுக்கும் ஒரு முறை, அணி வீரர்கள் கூட்டம் நடத்தப்படும். கூட்டத்தில் அனைத்து பிரச்னைகளும் விவாதத்தில் எடுத்துக் கொள்ளப்படும். வீரர்கள் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளும் வகையிலேயே கும்ப்ளே இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதே வேளையில் வீரர்களின் சுதந்திரம் பாதிக்கபடாது எனவும், சுதந்திரத்தின் எல்லையறிந்து வீரர்கள் நடந்து கொள்ள வேண்டுமென்றும் கும்ப்ளே கருதுவதாகத் தெரிகிறது.
அத்துடன் இந்திய அணி வீரர்களுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதே தனது பயிற்சியாளர் பணியின் முதல் பணியாக இருக்க வேண்டுமென கும்ப்ளே முயற்சி எடுத்து வருகிறார். இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுக்கு புறப்படும் முன்னதாக பிரபல பாடகர் வசுந்தரதாஸ் இசைநிகழ்ச்சியை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. தற்போது மேற்கிந்திய தீவில் முகாமிட்டுள்ள இந்திய வீரர்கள், அழகிய கடற்கரைகளில் இருந்து புகைப்படங்களை எடுத்து ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.