Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 25, 2016

கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு 'கட்' : விமான நிலைய வாசலில் 'கும்' இருட்டு


நெடுஞ்சாலைத் துறை மின் கட்டணம் செலுத்தாததால், மின் வாரியத்தினர் மின் இணைப்பை துண்டித்ததையடுத்து, விமான நிலைய நுழைவு வாயில், இருளில் மூழ்கி உள்ளது. சென்னை, விமான நிலையம் எதிரே, போக்குவரத்து நெரிசலை குறைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மேம்பாலம் கட்டி, 2008ல் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. அப்போது, விமான நிலையத்தின் நுழைவு வாயில் அருகில், மூன்று உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. அவை, வளாகத்தின் ஒரு பகுதி, அணுகுசாலை மற்றும் மேம்பாலத்திற்கு வெளிச்சம் கொடுத்தன.

ஒரு வாரத்திற்கும் மேலாக...: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பராமரித்து வந்த, அந்த மின்விளக்குகள், 2013ல், மாநில நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. அதிலிருந்து, மின் விளக்குகளுக்கான மின் கட்டணம் செலுத்தப்படவில்லை. தற்போது, 15 லட்சம் ரூபாய், பல்லாவரம் மின் வாரியத்திற்கு செலுத்த வேண்டி உள்ளது.
மின் வாரியம் பலமுறை கடிதம் அனுப்பியும், நேரில் முறையிட்டும், நிலுவைத் தொகையை மாநில நெடுஞ்சாலைத்துறை செலுத்தவில்லை. அதனால்,
கடந்த, 10 நாட்களுக்கு முன், மூன்று உயர்கோபுர மின்விளக்குக்குச் செல்லும், மின் இணைப்பை மின்வாரியம் துண்டித்துள்ளது. விமான நிலையத்தில், 24 மணி
நேரமும் பயணிகள், வருவதும் செல்வதுமாக இருக்கும் நுழைவு வாயில் பகுதி முழுவதும், இருளில் மூழ்கியுள்ளது. இதனால், பயணிகள் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதில் சிக்கில் எழுந்துள்ளது. அணுகு சாலை, மேம்பாலத்திலும் இருள் சூழ்ந்துள்ளதால், விபத்துகள்
ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. விபத்து, திருட்டுக்களை தவிர்க்க, உயர் கோபுர மின் விளக்குகளுக்கான மின் கட்டணத்தைச் செலுத்தி, விமான நிலையத்தின் நுழைவு வாயிலை ஒளி பெறச்செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

பல முறை கேட்டும்...: மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: 'நிலுவைத் தொகையில் சிறிது தொகையையாவது செலுத்துங்கள்' என, பலமுறை கேட்டோம். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவே இல்லை. வேறு வழியின்றி மின் இணைப்பை துண்டித்துள்ளோம். 'குறிப்பிட்ட நாட்களுக்குள், கட்டணத்தை செலுத்தி விடுவோம்' என, உறுதி அளித்தால், மின் இணைப்பு வழங்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தேசிய நெடுஞ்சாலை ஆணையம், எங்களிடம் ஒப்படைக்கும் போது, பராமரிப்பு ஆவணங்களை
முறையாக ஒப்படைக்கவில்லை. அதனால், தான் மின் கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. அறிக்கை தயார் செய்து உயர் அதிகாரிகள், ஒப்பதலுக்கு அனுப்பி உள்ளோம். விரைவில், மின் கட்டணத்தை செலுத்தி விடுவோம்' என்றார்.

தலைநகரத்துக்கு, மேலை நாடுகளில் இருந்து, இரவு நேரங்களில் வருவோர், முதலில் பார்ப்பது இந்த பகுதியைத் தான். அந்த இடமே, இப்படி இருளில் மூழ்கி இருந்தால், எந்த நம்பிக்கையில், இங்கு சுற்றுலா, பணி மற்றும் தொழிலை மேற்கொள்வர் என்பது தெரியவில்லை.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.