ஹரியானாவில் மாட்டிறைச்சியை கடத்துவதாக இரு இளைஞர்களை மாட்டுசாணத்தை சாப்பிட வைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
குந்த்லி - மானேசர் சாலையில் ஒரு வேனில் மாட்டிறைச்சி கொண்டு செல்வதாக கிர்கான் பசு மீட்பர்கள் சங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த இயக்கத்தின் தலைவர் தர்மேந்திர யாதவ் தலைமையில் ஒரு கும்பல் அந்த வேனை விரட்டி சென்றுள்ளது.
வேனை மடக்கிய கும்பல் உள்ளே இருந்த இறைச்சியை சோதித்து பார்த்துள்ளது. பின்னர் மாட்டுக்கறி கடத்துவதாக கூறி வேனில் இருந்த ரிஸ்வான், முக்தீர் என்ற இருவரையும் 'பஞ்சகவ்யம்' என்று சொல்லப்படும் மாட்டு சாணம், மாட்டு சிறுநீர்,பால் , தயிர் , நெய் ஆகியவற்றை சாப்பிட வைத்துள்ளது.
கடந்த ஜுன் 10ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. சாலையோரத்தில் இரு இளைஞர்கள் அமர்ந்துள்ளனர். முகத்தில் ரத்தக் கரை காணப்படுகிறதுஅழுதவாறே எதையோ சாப்பிடுவது போல படம் உள்ளது. அருகில் தண்ணீரும் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தர்மேந்திர யாதவ் கூறுகையில், ''அந்த வேனை 7 கிலோ மீட்டர் தொலைவு விரட்டி பிடித்தோம். வேனில் மாட்டிறைச்சி இருந்தது. அவர்களுக்கு பாடம் கற்பிக்கவே இப்படி செய்தோம்'' என கூறியுள்ளார்.
கடந்த 10ம் தேதி இந்த சம்பவம் நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் அந்த இளைஞர்களை தாக்கிய கும்பல், பின்னர் அவர்களை ஃபரிதாபாத் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளது.ஃபரிதாபாத் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அனில் குமார் கூறுகையில்,'' காரில் இருந்தது மாட்டிறைச்சிதான் என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதனால் அந்த இருவரும் கைது செய்யப்பட்டு ரீமான்டில் வைக்கப்பட்டுள்ளனர். அதற்கு முன்பு அங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. இளைஞர்கள் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.