Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 7, 2016

திருவனந்தபுரம் கடலில் மீனவர்கள் வலையில் சிக்கிய அதிசய கண்ணாடி மீன்


திருவனந்தபுரம் கடலில் மீனவர்கள் வலையில் சிக்கிய அதிசய கண்ணாடி மீனை அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.

திருவனந்தபுரத்தை அடுத்த கோவளம் கடலில் நேற்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்பிய போது, அவர்களின் வலையில் வித்தியாசமான மீன்கள் சிக்கி இருந்தன.

கண்ணாடி போல் பளபளப்பாக காணப்பட்ட அந்த மீன் சூரிய ஒளியில் தகதகவென பிரதிபலித்தது. பல மீனவர்களின் வலையில் இத்தகைய மீன்கள் ஏராளமாக சிக்கி இருந்தன.

இதுபற்றி மீனவர்கள் கேரள மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து கண்ணாடி மீன்களை கைப்பற்றி ஆய்வுக்கு கொண்டு சென்றனர்.

இதுபற்றி கோவளம் பகுதி மீனவர்கள் கூறும்போது, இதுபோன்ற கண்ணாடி மீன்களை நாங்கள் இதுவரை பிடித்ததில்லை. இப்போது தான் வலையில் சிக்கி உள்ளது. இது எந்த வகை மீன் என்பதை மீன்வளத்துறையினர்தான் கண்டுபிடித்து தெரிவிக்க வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.