மத்திய தரைக்கடல் பகுதியில் விழுந்து நொறுங்கிய எகிப்து விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து சிக்னல் கிடைத்திருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு 66 பேருடன் ‘எகிப்து ஏர்’ நிறுவனத்தின் பயணிகள் விமானம் கடந்த மாதம் 19-ம்தேதி புறப்பட்டது. இந்த விமானம் மத்திய தரைக்கடல் பகுதியில் பறந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. மாயமான அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாக சில மணி நேரத்தில் தெரிய வந்தது.
இரண்டு நாட்கள் தேடுதலுக்குப் பிறகு எகிப்தின் அலெக்சாண்ட்ரியா நகரில் இருந்து 290 கி.மீட்டர் தொலைவில் விமானத்தின் பாகங்களும் பயணிகளின் உடல் பாகங்களும் கடலில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், எந்த உடல்களும் முழுமையாக மீட்கப்படவில்லை. விமானத்தின் கருப்பு பெட்டியும் கண்டறியப்படாமல் இருந்தது. கடலுக்கடியில் கிடப்பதாக கூறப்படும் விமானத்தின் முக்கிய பாகங்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், எகிப்து விமான கறுப்பு பெட்டிகளில் இருந்து வரும் சிக்னல்கள் போன்ற சிக்னல்களை மத்திய தரைக்கடல் பகுதியில் கண்டறிந்திருப்பதாக எகிப்து அரசு இன்று தெரிவித்தது. பிரெஞ்சு கடற்படை கப்பலில் உள்ள ஒலி ஆய்வு அமைப்புகள் இதனை கண்டறிந்ததாக விமான போக்குவரத்து துறை கூறியது. இதனை பிரெஞ்சு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இதையடுத்து கடலுக்கடியில் நீந்திச் சென்று கருப்பு பெட்டிகளை மீட்பதற்கு ரோபோக்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த ரோபோக்கள் கொண்ட மற்றொரு கப்பல் மத்திய தரைக்கடல் பகுதிக்கு ஒரு வாரத்திற்குள் சென்று சேரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.