ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று புணேவுக்கு எதிரான ஆட்டத்தின் போது, சரியாக பந்தை தடுக்காத சக வீரர் அம்பதி ராயுடுவை திட்டினார் மும்பை இண்டியன்ஸ் வீரர் ஹர்பஜன் சிங்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ரைசிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ், மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் புணே நகரில் நடைபெற்றது. புணே அணி முதலில் பேட் செய்தபோது, ஹர்பஜன் வீசிய 11-வது ஓவரில் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் புணே வீரர் திவாரி.
வேகமாக பவுண்டரி சென்ற பந்தை 'டைவ்' அடித்து தடுத்த நிறுத்த முயன்றார் அம்பதி ராயுடு. எனினும், பந்து பவுண்டரிக்கு சென்றுவிட்டது. இதையடுத்து கோபமடைந்த ஹர்பஜன் சிங், அம்பதி ராயுடுவை சரமராரியாக திட்டத் தொடங்கினார்.
இதனால் கோபமடைந்த அம்பதி ராயுடு வேகமாக ஹர்பஜன் சிங்கை நோக்கி முன்னேறினார். இரு வீரர்களும் ஒருவரை ஒருவர் நோக்கி வேகமாக முன்னேறினர்.
இந்நிலையில் மூத்த வீரரான ஹர்பஜன் சிங், கோபம் தணிந்து அம்பதி ராயுடுவை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். எனினும், கோபம் குறையாக ராயுடு, சற்றே அழும் நிலைக்கு சென்றுவிட்டார். அவர் ஹர்பஜனின் கையை வேகமாக தட்டிவிட்டு, மீண்டும் தனது பீல்டிங் செய்வதற்காக சென்றுவிட்டார். இந்நிகழ்ச்சியில் மைதானத்தில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறிது நேரத்துக்குப் பின்னர் ஹர்பஜன் சிங் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அப்போது அம்பதி ராயுடு, ஹர்பஜன் சிங்கை கட்டித் தழுவி வாழ்த்தினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.