நடந்து முடிந்த தமிழ்நாடு 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுகவும் அதிமுகவும் போட்டிப் போட்டுக்கொண்டு தலா ரூ.3000 கோடியை செலவு செய்து வாக்குகளைப் பெற்றதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பரபரப்புப் புகார் தெரிவித்துள்ளார்.
முன்னணி தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றிற்கு திருமாவளவன் பேட்டியளித்துள்ளார். அதில், மேற்கண்டவாறு அவர் கூறியுள்ளார். அந்தப் பேட்டியில்,திருமாவளவனிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அவற்றுக்குப் பதில் அளித்த திருமாவளவன்,'பாமக, தேர்தலுக்காக ரூ. 100 கோடியில் இருந்து ரூ. 200 கோடி வரை செலவு செய்துள்ளார்கள். எங்கள் மக்கள் நலக்கூட்டணி 234 தொகுதியிலும் மொத்தத்தில் ரூ. 50 கோடியில் இருந்து ரூ.60 கோடி கூட செலவு செய்திருக்கமாட்டோம்' என தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், தமிழகத்தில் அதிமுகவிற்கு எதிராக எதிர்க் கட்சிகளை ஒன்று சேர்க்க திமுக தவறியது என்றார். மேலும் அவர் காட்டுமன்னார் கோவிலில் தனக்கு ஏற்பட்ட தோல்வி குறித்துத் தெரிவிக்கையில்,' குறைந்த வாக்குவித்தியாசத்தில் காட்டுமன்னார் கோயில் தொகுதியில் தோற்றதை கவுரவமான தோல்வி என்று எடுத்துக்கொண்டேன். எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் நன்றாக செய்திருப்பேன். என் மீது அபரிதமான நம்பிக்கையும் பற்றும் வைத்திருந்த மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதையும் மீறி தோல்வி என்பது சற்று ஏமாற்றத்தை, அதிர்ச்சியை தந்திருக்கிறது.' என்று கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.