Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 4, 2016

அடிக்கடி சண்டை போடாதீங்க : அதிமுக வேட்பாளர் சி.ஆர்.சரஸ்வதி விரக்தி


பல்லாவரம் தொகுதி அதிமுக ஆலோசனை கூட்டம் காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன்  தலைமையில் பல்லாவரத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் பேசியதாவது: தேர்தல் நெருங்கிவிட்டது, இனியும் வேட்பாளரை பிடிக்கவில்லை என விமர்சிக்காதீர்கள். கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படுங்கள். வேட்பாளர், ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டவர். அவரை ஜெயிக்க வைக்க வேண்டியது நமது கடமை. பலர் தேர்தல் வேலை பார்ப்பது போல் நடிக்கின்றனர். அவர்கள் உண்மையாகவே கட்சிக்காக பாடுபட வேண்டும். ஒவ்வொருவருக்கும் கட்சி உணர்வு சிறிதளவாவது இருக்கவேண்டும். சிலர் எதிரணிக்கு சாதகமாக செயல்படுகின்றனர்.

அவர்கள் அதை மாற்றிக்கொள்ள வேண்டும். கோஷ்டி சண்டை போட்டுக்கொண்டு கட்சிக்காரர்களே ஒருவரை ஒருவர் அடித்து கொள்வது வெட்கமாக இருக்கு என்றார்.  ஓட்டுப்பதிவுக்கு 2 வாரங்களே உள்ள நிலையில் மாவட்ட செயலாளர் இவ்வாறு பேசியிருப்பது அதிமுக வேட்பாளர் மீதான அதிருப்தி குறையவில்லை என்பதையே காட்டுகிறது.  இதைத்தொடர்ந்து பேசிய வேட்பாளர் சி.ஆர்.சரஸ்வதி,  “யார் எங்கு அழைத்தாலும் நான் வருவேன். பிரச்னை என்றால் போனில் பேசுங்கள். என்னை வரக்கூடாது என சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. யாரையும் கேட்டு நான் செயல்படவில்லை. அடிக்கடி பிரசாரம் செய்யும்போது தேவையில்லாமல் சண்டை போட்டுக்கொள்கிறீர்கள். ரொம்ப வெக்கமா இருக்கு. எனது வெற்றிக்கு உழைப்பதாக நினைக்காமல் மீண்டும் ஜெயலலிதாவை முதல்வராக்க உழைப்பதாக நினைத்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.