Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 11, 2016

சோழவந்தானில் அதிமுக பிரமுகர்கள் கைது



மதுரை மாவட்டம் சோழவந்தானில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த அதிமுக வார்டு செயலாளர் மற்றும் பேரூர் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சோழவந்தானை சேர்ந்தவர் சுந்தரேசன். அதிமுக வார்டு செயலாளராக உள்ள இவர், அப்பகுதியை சேர்ந்த வாக்காளர்களுக்கு, தலா ரூ. 250 வீதம் பணப்பட்டுவாடா செய்துள்ளார். இதன்பேரில், போலீசார் சுந்தரேசனை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த ரூ. 55,500 பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, சமயநல்லூர் டிஎஸ்பி வேல்முருகன், சுந்தரேசனிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது, சோழவந்தான் அதிமுக பேரூர் செயலாளர் ராமச்சந்திரன் சொன்னதன் பேரில், வாக்காளர்களுக்கு பணம் பிரித்துக் கொடுத்ததாக, சுந்தரேசன் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, ராமச்சந்திரனையும் போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.