Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 4, 2016

அப்போட்டாபாத்தில் ஒசாமா பின்லேடனின் மறைவிடம் பாகிஸ்தானுக்கு தெரியும்: ஹிலாரி கிளிண்டன்


அப்போட்டாபாத்தில் ஒசாமா பின்லேடனின் மறைவிடம் பாகிஸ்தானுக்கு தெரியும் என்று ஹிலாரி கிளிண்டன் கூறிஉள்ளார்.

அமெரிக்காவில் வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் 110-மாடி இரட்டை கோபுரத்தின் மீதும் விமானங்களை மோதி கடந்த 2001 செப்டம்பர் 11-ந் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 3 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை மூளையாக இருந்து செயல்படுத்தியது அல்-கொய்தா தலைவர் பின்லேடன். பின்லேடன் பாகிஸ்தானில் அப்போட்டாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்தபோது, கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி, அமெரிக்க ராணுவம் ”ஆபரேஷன் நெப்டியூன் ஸ்பியர்” என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை எடுத்து கொன்றது.

அமெரிக்கா, ஒசாமா பின்லேடனை தேடியபோதே அவர் இருந்த இடம் பாகிஸ்தானுக்கு தெரியும் என்று பல்வேறு தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் விதமாக அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி ஹிலாரி கிளிண்டனும், அப்போட்டாபாத்தில் ஒசாமா பின்லேடனின் மறைவிடம் பாகிஸ்தானுக்கு தெரியும் என்று கூறிஉள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் சி.என்.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்திற்கு தெரியாமல் ஒசாமா பின்லேடன் அப்பகுதியில் பாதுகாப்பான வீட்டை கட்டிருக்க சாத்தியம் கிடையாது. வழக்கத்திற்கு மாறான பாதுகாப்பான வீடானது ராணுவ அகடாமி மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் இருந்த பகுதியில் கட்டப்பட்டு உள்ளது, இருப்பினும் கூட எங்களால் நிரூபிக்க முடியவில்லை,”  என்று கூறிஉள்ளார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.