தேசத்தில் மரண தண்டனை பெற்றவர்களில் 4-ல் 3 பங்கு குற்றவாளிகள் சமூகம், பொருளாதாரம் மற்றும் கல்வியறிவில் பின்தங்கியவர்களாக உள்ளனர் என்று அறிக்கை தெரிவித்து உள்ளது.
டெல்லி தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் மரண தண்டனை மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், மரண தண்டனை பெற்ற கைதிகள், சிகரெட் சூடு, ஊசிகள் இறக்கப்படுதல், நிர்வாணம், பாலியல் துன்புறுத்தல், சிறுநீரை குடிக்க செய்தல், ஹீட்டரில் சிறுநீர் கழிக்க செய்தல், கம்பிகளில் தொங்குதல், கொடூரமான தாக்குதல் போன்ற சித்தரவதைகளை எதிர்கொள்கின்றனர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் சமூக பொருளாதார ஆவணங்களை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது.
தேசத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் நான்கில் மூன்று பங்கினர் பொருளாதாரத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தூக்கு மேடையை எதிர்கொண்டு உள்ள குற்றவாளிகளில் 76 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்றும் அவர்கள் மதசிறுபான்மையினர் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அறிக்கையில் நாட்டில் உள்ள 12 பெண் மரண தண்டனை கைதிகளும் இடம்பெற்று உள்ளனர். 270 சிறை கைதிகளில் சுமார் 260 கைதிகளிடம் அவர்கள் காவலில் அனுபவித்த சித்தரவதைகள் குறித்து பேசப்பட்டு உள்ளது. அவர்கள் மனித தன்மையற்ற வகையில் கொடூரமான முறையில் நடத்தப்பட்டது, இருண்ட சுவர்களுக்குள் அனுபவித்த மன சித்தரவதையை அறிக்கையானது வெளிகூறுகிறது.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 23 சதவீதம் பேர் படிக்காதவர்கள், 61.6 சதவீதம் பேர் அவர்களுடைய பள்ளி படிப்பை முடிக்காதவர்கள். அறிக்கை தொடர்பான குழு விவாதத்தின் போது பேசிய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மதன் பி லாகூர், குற்றவாளிகளுக்கு படிப்பறிவு இல்லையென்றால் அவர்களுடைய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று கூறி உள்ளார். நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் அடைக்கப்பட்டு உள்ள 385 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர், மரண தண்டனையை எதிர்க்கொண்டு உள்ளவர்களில் அதிகப்பட்சமாக 79 பேர் உத்தரபிரதேச மாநிலத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.