Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 1, 2016

இருபது ஓவர் உலகக்கோப்பை: இரண்டு நோபால்களால் இறுதிபோட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த இந்தியா


இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆண்கள் பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணியுடனான அரையிறுதியாட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை ஈட்டியது.
மும்பையில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்-கை தேர்வு செய்தது. இதையடுத்து‌ முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய விராட் கோலி 47 பந்துகளில் ஆட்ட‌மி ழக்காமல் 89 ரன்கள் விளாசினார். ரோகித் ஷர்மா 43 ரன்களும், ரஹானே 40 ரன்களும் எடுத்தனர்.
193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் கெய்ல் 5 ரன்களிலும், சாம்வேல்ஸ் 8 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். இதன்பின்னர் சார்லஸ் ஜான்சனும், சிம்மன்ஸ்-சும் பவுண்டரிகளும், சிக்சர்களுமாக விளாசி இந்திய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்படுத்தினர். சார்லஸ் ஜான்சன் 36 பந்துகளில் 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன்பின்னர் ஆண்ட்ரே ரஸ்ஸலும் வேகமாக ரன்கள் குவிக்க, 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி இலக்கை‌ எட்டியது. சிம்மன்ஸ் 82 ரன்களுடனும், ரஸ்ஸல் 43 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதியாட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது.
இந்திய அணியுடனான அரையிறுதியாட்டத்தில் அரைசதம் விளாசிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் லெண்டி‌ல சிம்மன்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
51 பந்துகளை எதிர்கொண்ட லெண்டி‌ல சிம்மன்ஸ் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் விளாசினார். 5 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் இதில் அடங்கும். இரண்டு முறை அவர் கேட்ச்‌ கொடுத்தார். எனினும் மூன்றாவது நடுவரின் பரிசீலனைக்கு விடப்பட்ட போது, அவருக்கு வீசப்பட்ட பந்துகள் நோபால்கள் என தெரியவந்தது. இதில் அஸ்வின் ஒரு நோபாலும் , ஹர்த்திக் பாண்டயா ஒரு நோபாலும் வீசினர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.