Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 2, 2016

நாளை முதல் குடிக்க மாட்டேன்... உறுதிமொழி எடுத்த எம்.எல்.ஏ.க்கள்!


பீகார் மாநிலத்தில் நாளை முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்பட உள்ளதால், நாங்கள் மது குடிக்க மாட்டோம் என அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சட்டப்பேரவையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பீகார் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்தபோது, ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் ஆட்சி அமைத்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று நிதிஷ்குமார் வாக்குறுதி அளித்து இருந்தார். அதேபோல் அந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்று நிதிஷ்குமார் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார். அப்போது, வருகின்ற ஏப்ரல் 1–ம் தேதி முதல் பீகார் மாநிலத்தில் முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, பீகார் மாநிலத்தில் நாளை (வெள்ளிக் கிழமை) முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பான சட்ட திருத்தம் நேற்று பீகார் மாநில சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டது. குரல் ஓட்டெடுப்பு மூலம் அந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பீகார் மாநிலத்தில், இனி யாரும் மது விற்பனை செய்யக்கூடாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மேலும், 'நாளை முதல் மது குடிக்க மாட்டேன்' என்று ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று சட்டசபையில் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறினார். இதையடுத்து, அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்களது கைகளை உயர்த்தி ஒருமித்த குரலில், ''இனி நாங்கள் மது குடிக்க மாட்டோம்' என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அதன் பின், அது தொடர்பான ஒருதீர்மானம் கொண்டு வரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பீகாரில் பூரண மது விலக்கை அமல்படுத்த கடும் தண்டனை சட்டங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, தடையை மீறி மது விற்பனை செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்திருத்தமும் செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல் தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவி ஏற்பவரும் செய்வாரா?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.