செல்வக் குடும்பத்தில் பிறந்தவள் ஆர்த்தி . தன் வீட்டில் விதவிதமான கிளிகள், பல நிறத்தில் சிட்டுக் குருவிகள், மைனா வகைகள், அழகழகான புறாக்களை எல்லாம் அதற்கெனத் தனித் தனியாக கூண்டுகள் அமைத்து, அவைகளை வளர்த்து வந்தாள்.
அவள் சிநேகிதி ரேவதி அவள் வீட்டிற்கு வந்தாள். அவளிடம் தான் வளர்க்கும் பறவை களை பற்றி பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தாள் ஆர்த்தி.
"ஆர்த்தி! பறவைகளைக் கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்தால், அவை எப்படி சுதந்திரமாக நடமாடும்?''என்றாள் ரேவதி.
"கூண்டுக்குள் அடைக்காவிட்டால் அவை பறந்திடுமே! இப்போது பார் இந்தக் கிளியை அழைக்கிறேன். கூண்டைத் திறந்ததும் அது எவ்வளவு ஆனந்தமாக என் தோளிலே பறந்து வந்து உட்காரும் என்பதை நீயே பார்க்கப் போகிறாய்!'' என்று கிளிக் கூண்டைத் திறந்துவிட, பல கிளிகள் பறந்து வந்து அவள் மடியிலும், தோளிலும் கைகளிலும் வந்து உட்கார்ந்தன. அதைப் பார்த்து ரேவதி பூரிப்படைந்தாள்.
"கூண்டிலிருந்து இவை வெளியே வந்ததும், எவ்வளவு சுதந்திரமாக இருக்கின்றன பார்த் தாயா? தங்கக் கூண்டு என்றாலும் இவை களுக்கு அது ஜெயில் மாதிரிதானே தெரியும். நீ என்னதான் செல்லமாக இவைகளை வளர்த் தாலும், கூண்டுக்குள் அடைத்து அடிமைகள் போல்தான் நீ அவைகளை நடத்துவதாக நினைக்கும்!''
"அப்படி இவை நினைத்தால் இவ்வளவு பாசமாக என்னோடு பழகுமா? ஏன் வீணாக கற்பனை பண்ணுகிறாய்? இவைகளை வளர்க்க எங்கள் வீட்டில் எவ்வளவு செலவு செய்கின்றனர் தெரியுமா?
"அதை மறுக்கவில்லை. ஆனால், நீ தனிமை யில் இருக்கும் பொழுது சிந்தித்துப் பார். நம்மைக் கூண்டுக்குள் அடைத்து எவ்வளவு தான் செல்லமாக நம்மை வளர்த்தாலும், கூண்டு நமக்கு ஜெயில் மாதிரிதானே இருக்கும்!''
"நாம் ஆறறிவு படைத் தவர்கள்; பறவைகள் அப்படி அல்லவே!'' என்றாள் ஆர்த்தி.
"நீ சொல்வது தான் சரி எனப் பிடிவாதம் பிடிக்கிறாய். நான் சொல்வதுதான் சரி என்கிறேன். நீ சும்மா இருக்கும் நேரம் உன் அம்மாவைக் கேட்டுப் பாரேன்!'' என்று கூறி, ஆர்த்தியை விளையாட வெளியே அழைத்துப் போனாள் ரேவதி.
விளையாட்டு முடிந்து வீடு திரும்பிய ஆர்த்தி, தன் பாடங்களையெல்லாம் படித்து முடித்தாள். சாப்பிட்டு விட்டுத் தூங்கப் போனாள். அவளுக்குத் தூக்கமே வரவில்லை. ரேவதி சொன்னவையெல்லாம் அவள் மனக் கண் முன் தோன்றின.
"பறவைகளை நான் எவ்வளவு செல்லமாக வளர்க்கிறேன். அது பற்றி ரேவதிக்கு என்ன தெரியும்' எனத் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
சிறிது நேரம் சென்றது. ஆர்த்திக்கு வினோதமான உணர்வு ஏற்பட்டது. தனக்கு இறகுகள் முளைப்பது போல உணர்ந்தாள். அவள் எழுந்து பார்த்தாள். உண்மையிலேயே அவளுக்கு இறக்கைகள் முளைத்திருந்தன. அவள் கண்களை அவளால் நம்ப முடியவில்லை. அவளை அறியாமலேயே பறந்து போனாள்.
வேடன் ஒருவன், பெண் ஒருவள் பறந்து வருவது பார்த்து வியப்படைந்தான். தன் வலையை வீசி அவளைப்பிடித்தான். வீட்டிற் குள் கொண்டு வந்து பெரிய கூண்டுக்குள் அடைத்தான்.
"என்னைக் கூண்டுக்குள் அடைக்காதே விட்டுவிடு!'' என எவ்வளவோ கெஞ்சினாள் ஆர்த்தி. வேடன் அவளை அடைத்துவிட்டு வேட்டையாட வெளியே போனான்.
அந்தநேரம் வேடனின் மகள் வீட்டிற்குள் வந்தாள். ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டு திகைத்தாள். சுற்றும், முற்றும் பார்த்தாள். கூண்டுக்குள் ஒரு பெண் அடைபட்டிருப் பதைப் பார்த்து அருகில் போனாள்.
"நான் ஒரு தவறும் செய்யவில்லை. என்னைக் கூண்டுக்குள் அடைத்து ஏன் சித்ரவதை செய்ய வேண்டும். நீயும் என்னைப் போல பெண்தானே! என்னைத் திறந்துவிடு, உனக்குக் கோடிப் புண்ணியம் கிடைக்கும்!'' என்று வேடனின் மகளிடம் கெஞ்சினாள்.
"கவலைப்படாதே! இந்தக் கூண்டிலிருந்து நான் உன்னை விடுதலை செய்கிறேன். நீ சுதந்திரமாகப் பறந்து போய் விடு. கூண்டுக் குள் பறவைகள் இருந்தாலே அதைச் சிறைச் சாலை மாதிரி நினைக்கும். நீயோ, இறக்கை முளைத்த பெண்ணாய் இருக்கிறாய். உனக்கு இந்தக் கூண்டுக்குள் இருப்பது எவ்வளவு வேதனையாக இருக்கும் என எனக்குத் தெரியும். நான் உன்னை இந்தக் கூண்டிலிருந்து விடுதலை செய்கிறேன். நீ பறந்து போய்விடு! என் தந்தை வந்ததும் நான் சொல்லிக் கொள்கிறேன்,'' என்றாள் வேடனின் மகள்.
உடனே கூண்டைத் திறந்து விட்டாள். சிறகு முளைத்த ஆர்த்தி பறந்து வெளியே போனாள்.
"கூண்டுக்குள் இருந்தால் எவ்வளவு சிரமமாக இருக்கும். நான் இனிமேல் பறவைகளைக் கூண்டுக்குள் அடைக்க மாட்டேன்.அவை களை உடனே திறந்து விடுவேன். அவைகள் சுதந்திரமாகப் பறந்து திரியட்டும்!'' என்று கத்தினாள்.
"ஏய் ஆர்த்தி! எழுந்திரு நேரம் என்னாச்சு, என்ன கனவு கண்டு உளறுகிறாயா?'' என அவள் அம்மா மீனாட்சி எழுப்பியதும், தான் கண்டது கனவு என உணர்ந்தாள்.
உடனே ஓடிப்போய் எல்லாப் பறவை களின் கூண்டுகளையும் திறந்து விட்டு, பறவைகளை பறக்க விட்டாள். அவை ஆனந்தமாக சிறகடித்துப் பறந்து போயின. அதைப் பார்த்து, தான் சிறகடித்து பறப்பது போல உணர்ந்தாள் ஆர்த்தி.
"என்ன ஆர்த்தி! உனக்குப் பைத்தியமா பிடித்துவிட்டது. ஏன் பறவைகளை எல்லாம் பறக்க விட்டாய்?'' என்று கேட்டாள் அவள் அம்மா.
"அவைகளைப் பறக்க விடாவிட்டால் எனக்குப் பைத்தியமே பிடித்திடும் போல் இருந்தது அம்மா!
கனவில் கூண்டுக்குள் இருந்ததை என்னால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை. இந்த பறவைகளை கூண்டுக்குள் அடைத்து அவற்றின் சுதந்திரத்தை இத்தனை நாளும் பறித்து விட்டேனே என இப்போது வருந்துகிறேன். பறந்த பறவைகள் இனிமேலாவது சுதந்திரமாக வாழட்டும் அம்மா!'' என்றாள் ஆர்த்தி.
"பறவைகளைக் கூண்டுக்குள் அடைத்து ரசிப்பதை விட சுதந்திரமாக பறக்க விட்டு ரசிப்பதுதான் நல்லது. நீ விரும்பினாயே என்றுதான், நான் பறவைகளைக் கூண்டிற்குள் அடைக்காதே எனச் சொல்ல விரும்ப வில்லை. இப்போதாவது உனக்குப் புத்தி வந்ததே அதுவே போதும்!'' என்றாள் ஆர்த்தியின் அம்மா.
பறவைகள் ஆனந்தமாக பறந்து கொண்டி ருப்பதை ரசித்துப் பார்த்தாள் ஆர்த்தி.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.