Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 17, 2016

நடிகர் ரஜினிகாந்த் பற்றி பரபரப்பு பேச்சு விஜயகாந்த் உருவ பொம்மை எரிப்பு ரஜினி ரசிகர்கள் ஆவேசம்


அரசியலில் நடிகர் ரஜினிகாந்த் போல் பின்வாங்க மாட்டேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆவேசமாக பேசியது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்தின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஜினி ரசிகர்கள் அவரது உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 12ம் தேதி காஞ்சிபுரத்தில் தனது முதல் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அம்பத்தூர், செய்யூர், சோழிங்கநல்லூர், திருத்தணி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்த விஜயகாந்த் சென்னை வில்லிவாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது: அதிமுக ஆட்சியால் தமிழக மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. தமிழகத்தை தலைநிமிர செய்வேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா, நாட்டை குட்டிச் சுவராக்கிவிட்டார். எங்களிடம் மக்களின் அன்பு உள்ளது. ஆனால் அதிமுகவிடம் முரட்டு பணம் இருக்கிறது. அதிமுகவுக்கு ஓட்டுபோட்டால் மீண்டும் நீங்கள் கஷ்டத்தை தான் அனுபவிக்க வேண்டும். நான் நடித்த கஜேந்திரா படத்தில் இடம்பெற்ற ‘’தமிழன், தமிழன்’’’’ என்ற பாடலை வெளியிட தடைவிதிக்குமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். ஆனால் நான் அதை கண்டு பயப்படவில்லை. படத்தை வெற்றிகரமாக வெளியிட்டேன். நல்ல மனிதர்களுக்கு மட்டுமே நான் பயப்படுவேன்.

அரசியலில் நடிகர் ரஜினிகாந்த் போல பின்வாங்க மாட்டேன். அவர் எனக்கு நல்ல நண்பர். நாங்கள் அடிக்கடி தொலைபேசியில் பேசுவோம். தமிழகத்தில் மாற்றம் ஏற்பட மக்கள் நலக்கூட்டணிைய நீங்கள் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார். விஜயகாந்தின் இந்த பேச்சுக்கு ரஜினிர சிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று சென்னையின் பல இடங்களில் விஜயகாந்தின் உருவபொம்மையை எரித்து ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னதாக தேர்தல் தொடர்பாக விமான நிலையத்தில் பேட்டி அளித்த நடிகர் ரஜினிகாந்த், ‘’தேர்தலில் நிச்சயம் வாக்களிக்க வேண்டும்’’’’ என்று பேசியிருந்தார். இந்த நிலையில் நடிகர் ரஜினி குறித்து விஜயகாந்த சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

உருவபொம்மை எரிப்பு:  ரஜினியை விமர்சித்து விஜயகாந்த் பேசியது ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘‘எங்கள் தலைவர் தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருக்கிறார். சினிமாவில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார். அவரை விஜயகாந்த் சீண்டியதை ஏற்றுக்கொள்ள முடியாது. விஜயகாந்த் அவரது வேலையைப் பார்க்க வேண்டும். அதைவிட்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான பதம் விபூஷன் விருதுபெற்ற எங்கள் தலைவரை விமர்சித்தால் வருகிற தேர்தலில் அதற்கு தக்க பாடம் புகட்டுவோம்.’’ என்று ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கொருக்குபேட்டை மீனாம்பாள் நகரை சேர்ந்த சுமார் 25 பேர் திடீர் என திரண்டனர். நேற்று மதியம் 3 மணியளவில் ரஜினி ரசிகர்கள் அங்குள்ள எண்ணூர் நெடுஞ்சாலையில்,  விஜயகாந்தை கண்டித்தும், அவரது பேச்சை கண்டித்தும்  கோஷம்  போட்டனர், திடீெரன விஜயகாந்த் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர். தகவல் அறிந்து போலீசார் செல்வதற்குள் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்று விட்டனர். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.