Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 2, 2016

இப்பவே இப்படி... ஆட்சியை பிடிச்சா...? - பிரேமலதாவை விளாசும் ராமராஜன்!


"இவங்க நேராக மேடைக்கு வருவாங்களாம், பேசிவிட்டு கிளம்புவாங்களாம்" என்று விஜயகாந்த்தையும், அவரது மனைவி பிரேமலதாவையும் கடுமையாக விமர்சித்து பேசினார் அதிமுக நட்சத்திர பேச்சாளர் ராமராஜன்.
கடந்த 29ம் தேதி திருச்சி உறையூரில் தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசினார்.
இந்த கூட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திருச்சி உறையூரில் பஞ்சவர்ணசாமி கோயில் அருகே பிரேமலதா பேசிய அதே இடத்தில் நேற்றிரவு அதிமுகவினர் பொதுக்கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில்  அதிமுக அமைப்பு செயலாளர் எம்.எல்.ஏ வளர்மதி, கொறடா மனோகரன், நடிகர் ராமராஜன், சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

கூட்டத்தில் பேசிய நடிகர் ராமராஜன், தமிழகத்தில் வட இந்தியர்கள்கூட தமிழை நன்றாகப் பேசுகிறார்கள். ஆனால், விஜயகாந்த் பேசுவது புரியவில்லை. விஜயகாந்த்தை திருமணம் செய்த பிறகுதான் பிரேமலதாவுக்கு விஜயகாந்த்தை தெரியும். எங்களுக்கு அதுக்கு முன்னாடியிருந்து தெரியும். அவிழ்த்து விட்டால் தாங்கமாட்டீங்க. நீயெல்லாம் தமிழகத்தில் அரசியல் பேச என்ன தகுதியிருக்கு. இதுல இவங்க தென்னகத்து ஜான்சி ராணின்னு கோஷம் போடுறாங்க. இவங்க நேராக மேடைக்கு வருவாங்களாம். பேசிவிட்டு கிளம்புவாங்களாம்.
இப்பவே இந்தம்மா இப்படி நடந்துக்குதே, இன்னும் ஆட்சியை பிடிச்சிட்டா எவ்வளவு திமிராக நடந்துகொள்ளும்? கருணாநிதி தலைமையில் கல்யாணம் செய்துகொண்ட விஜயகாந்த், கட்சி ஆரம்பிக்கும்போது நான் எம்.ஜி.ஆரின் ரசிகன் என சொன்னார். அப்போது, தான் கருணாநிதியின் ரசிகர் என சொல்லியிருந்தால் ஒருத்தன்கூட கட்சியில் இருந்திருக்க மாட்டான். கடந்த 2011 தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிமுகதான் வெற்றி பெற்றுள்ளது.

மேற்கு வங்காளத்தில் மம்தா ஆட்சிதான் மீண்டும் வரும் என்று கருத்துகணிப்புகள் சொல்லுது, பீஹாரில் நிதீஷ்குமார் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. அந்தவகையில் அம்மாதான் மீண்டும் முதல்வர் ஆவார். அதுவரை கருணாநிதி கூட்டணிக்கு காத்திருக்க வேண்டியதுதான். குலாம் நபி ஆசாத் எனும் தேசிய தலைவர் வந்து பேசிவிட்டு போகிறார். ஆனாலும் கருணாநிதி, இன்னும் கூட்டணி கட்சிகளுக்காக காத்திருக்கிறார். இன்னமும் விஜயகாந்த் வருவார் என கருணாநிதி நம்புகிறார்.
தேர்தல் ஆணையம் கட்சிகள் தேர்தல் சமயத்தில் கூட்டணி சேரக்கூடாதுன்னு உத்தரவு போடணும். அப்பதான் தனித்துபோட்டியிடும் கட்சிகளின் உண்மை நிலவரம் தெரியும். திமுக தனித்து போட்டியிட தயாரா? இந்தியாவின் மூத்த தலைவர் ஜோதிபாசு, முடியாத வயதிலும் அரசியலில் இருந்து ஒதுங்கினார். ஆனால் கருணாநிதி முதல்வராவேன்னு அடம்பிடிக்கிறார். ஏனென்றால் பதவி ஆசை.
"டோண்ட் வொரி பி ஹேப்பி" அம்மா மக்கள் மனசுல நாற்காலிபோட்டு உட்கார்ந்து இருக்காங்க. கருணாநிதி குடும்பம் அடுத்த தேர்தலுக்கு பிறகு திருவாரூருக்கு திரும்பி போக வேண்டியதுதான்" என முடித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.