Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 2, 2016

சீனாவை அதிர வைத்த புயல் (வீடியோ)


சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஹர்பின் நகரை தாக்கிய கடும் புயல்,  அங்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

மிகவும் மோசமான வானிலை காரணமாக நகரின் பெருவாரியான பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி காணப்படுகிறது. காற்றின் வேகம் காரணமாக குடியிருப்பு கட்டடம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த கூரை ஒன்று பெயர்த்து வீசப்பட்டுள்ளது.

குடியிருப்பு கட்டடத்தில் இருந்து பெயர்ந்து விழுந்த கூரை தரை பதிக்கும் முன்னர் அருகாமையில் இருந்த பல கட்டடங்களை பதம் பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சாலையின் அருகில் இருந்த கட்டடம் என்பதால் கூரை பெயர்ந்து விழுந்தபோது அந்த வழியே சென்ற வாகனம் ஒன்று நொடிப்பொழுதில் தப்பியுள்ளது. ஒரு நொடி தாமதித்து இருந்தால் பெயர்ந்து விழுந்த கூரையின் அடியில் அந்த வாகனம் சிக்கி விபத்துக்குள்ளாகி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் பெயர்ந்து விழுந்த கூரையானது காற்றின் வேகம் காரணமாக, தரையில் விழுந்து சுக்கலாக உடைந்து சிதறியதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

அதே தெருவில் மின்கம்பம் ஒன்று சரிந்து,  நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் மீது விழுந்ததில், அந்த வாகனம் தீ பிடித்து எரிந்துள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் உடனடியாக தீயணைப்பு படையினர் வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.